கடந்த இரண்டு ஆண்டுகளாக வலிமை படத்தின்  அப்டேட் எப்போ வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு  ட்ரீட் கொடுக்கும் விதமாக  கடந்த ஜூலை 11 ஆம் தேதி வலிமை படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான இரண்டே நாட்களில் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால் செம குஷியான படக்குழுவினர் நன்றி தெரிவித்து அடுத்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டனர். அஜித் நடிப்பில் ஹெச்.வினோத், இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி  நடித்து வருகிறார்.  மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  ​இப்படத்தை போனி கபூர் மற்றும் ஜி ஸ்டியோஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர். அஜித் நடிக்கும் 61-வது படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் , வலிமை படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

 

வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் வெளியான நிலையில் படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியிடப்படும் என படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்திருந்தார். வலிமை அப்டேட் கேட்டு தொடர்ந்து அடம்பிடித்த ரசிகர்களுக்கு படத்தில் அம்மா பாடல் ஒன்று உள்ளது என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார் யுவன். இந்நிலையில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதியும் கசிந்துள்ளது. ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகி வரும் வலிமை படத்தின் டீசரை வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி , சுதந்திர தினத்தன்று வெளியிட இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய தகவல் அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை. இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கும் படக்குழுவினர்  வலிமை படத்திற்கான  புரமோஷன் வேலைகளில் தற்போது இறங்கியுள்ளனர்.

 

வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது வேறு எந்த ஒரு நடிகரின் படத்திற்கு இருந்ததாக தெரியவில்லை. முன்னதாக அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான நேர்க்கொண்ட பார்வை படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.  இந்நிலையில் இவர்கள் கூட்டணியில்  உருவாகி வரும் வலிமை   படமும் எப்பொழுதோ வெளியாகியிருக்க வேண்டியது என்றாலும் கொரோனா சூழல் காரணமாக திட்டமிட்டபடி படத்தின் வேலைகளை முடிக்க முடியவில்லை. படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதன் காரணமாகவே ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள், பொது இடங்கள், மேடைகள் என அனைத்து இடங்களிலும் வலிமை அப்டேட் கொடுங்க சார் என கேட்க தொடங்கிவிட்டனர். வலிமை படத்தில் அஜித் குமார் சிபிசிஐடியாக நடித்துள்ளாராம்.  அதிகாரியாக அதிரடி சண்டைக்  காட்சி ஒன்றிலும்  மாஸாக ஸ்டென்ட் செய்துள்ளாராம் அஜித். முன்னதாக அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்த படங்களை ரசிகர்கள் கொண்டாடினார்கள். நிச்சயம் வலிமை படமும் அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும் என நம்புவோம். வலிமை படம் வருகிற தீபாவளி பண்டிகை அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது