இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் செய்து 3 நாள் 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.


ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் டிசம்பர் 14ம் தேதி சட்டோகிராம் நகரில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.


இதன்காரணமாக அவர் மும்பை திரும்பி மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இதன்காரணமாக அவர் முதல் டெஸ்ட்டில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில், அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி, ஷிகர் தவன், ஸ்ரேயஸ் ஐயர், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட், இஷான் கிஷண் உள்ளிட்ட வீரர்கள் விளையாடவுள்ளனர்.


VIRAT KOHLI: 1214 நாட்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் சதம்.. மைதானத்தில் கோலி சொன்ன கெட்ட வார்த்தை..


பந்துவீச்சைப் பொருத்தவரை வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், தீபக் சஹர் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். கோலி, தவன், மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இஷான் கிஷண் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.


வங்கதேசத்தைப் பொருத்தவரை கேப்டன் லிட்டன் தாஸ், அனமுல் ஹேக், ஷாகிப் அல் ஹசன், முஷிஃபுர் ரஹிம், அஃபிப் ஹுசைன், யாசிர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.


நேரம்
முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 14ம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.
இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 22ம் தேதி டாக்காவில் 9 மணிக்குத் தொடங்குகிறது.
முன்னதாக, 3வது ஒரு நாள் கிரிக்கெட்டில், தவன் வெறும் 3 ரன்களில் ஆட்டமிழக்க,  மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன், கோலியுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


வங்கதேசத்தின் பந்துவீச்சினை நாலாபுறமும் சிதறடித்து ருத்ரதாண்டவம் ஆடிய 24 வயதான இஷான் கிஷன், 81 பந்துகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார்.  
இதையடுத்து தனது ஆட்டத்தை இன்னும் விரைவுபடுத்திய இஷான் கிஷான், சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விளாசினர். 






இதன் மூலம் வெறும் 126 பந்துகளில் தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதில் 23 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்கள் அடங்கும்.  அதோடு, தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்ய அவர் வெறும் 45 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். 


தொடர்ந்து, 210 ரன்கள் எடுத்திருந்தபோது, டஸ்கின் அகமது பந்துவீச்சில் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து இஷான் கிஷன் அவுட்டானார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக இஷான் கிஷன் மாறியுள்ளார்.