இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது டெஸ்ட் லீட்ஸில் உள்ள ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. சிறந்த பார்மில் உள்ள ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்த போட்டியில் வரலாறு படைக்க வாய்ப்பு உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா லீட்ஸ் மைதானத்தில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினால்,  முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் வைத்திருக்கும் ஒரு பெரிய சாதனையை முறியடிப்பார்.


ஜஸ்பிரித் பும்ரா இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5 விக்கெட் வீழ்த்தினால், பும்ரா 23 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எட்ட வாய்ப்பு உள்ளது. இதன்மூலம், மிகக் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எட்டிய வேகமான இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆவார். கபில் தேவ் 25 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இங்கி.vs இந்தியா: மூன்றாவது டெஸ்ட்டில் அஸ்வின் விளையாடுவாரா?- விராட் கோலியின் பதில் !


பும்ரா 2018 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவர், இந்திய மண்ணில் இதுவரை நான்கு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். மீதமுள்ள 91 விக்கெட்டுகளை வெளிநாட்டு மண்ணில் எடுத்துள்ளார். பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியவுடன், டெஸ்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 23 வது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார்.  100 டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டிய இந்திய வேகப்பந்து வீச்சாளராக  தற்போது, ​​அஸ்வின் உள்ளார்.


ஜோ ரூட்டுக்கு சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது


இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டும் சிறந்த பார்மில் உள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரராக ரூட்டுக்கு வாய்ப்பு உள்ளது. ரூட் இதுவரை இந்தியாவுக்கு எதிராக ஏழு டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் 7 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஜோ ரூட் அற்புதமாக ஸ்கோர் செய்து வருகிறார். முதல் டெஸ்டில் ரூட் 109 மற்றும் 63 ரன்கள் எடுத்தார். லார்ட்ஸ் டெஸ்டில் 180 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த ஆண்டு ஜோ ரூட் இரண்டு இரட்டை சதங்கள் மற்றும் 180 ரன்களுக்கு மேல் இரண்டு இன்னிங்ஸ் விளையாடியுள்ளார்.


Virat Kohli Black Water: விராட் கோலி குடிக்கும் கருப்பு தண்ணீர்.. விலை எவ்ளோ தெரியுமா....?