லக்னோவில் ஆட்டோவில் பயணித்தவர்களிடம் வாடகைக் கேட்டதற்காக  டிரைவரை போலீசார் முன்பே செருப்பால் அடித்த பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


 மக்களுடைய பயணத்தேவைகளை நிறைவேற்றுவதில் ஆட்டோவிற்கு முக்கிய பங்கு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு மக்கள் அதன் சேவையினைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஆட்டோவிற்கு வாடகைக்கொடுப்பதற்கு மட்டும் மக்களுக்கு என்ன பிரச்சனை வரும்னு தெரியாது. ஆட்டோ டிரைவர் கேட்கும் வாடகையை கொடுப்பதற்கு முன்னதாக அந்தளவிற்கு அவர்களிடம் பேரம் பேசுவது பழக்கம் மக்களிடம் உள்ளது. அப்படித்தான் லக்னோவில் ஆட்டோவில் பயணித்தவர்களிடம் ஆட்டோ வாடகையை முழுமையாக  கேட்டதற்கு செருப்பால அடிவாங்கிட்டார்னா பாத்துக்கோங்க. அப்படி என்ன நடந்தது தெரியுமா?





லக்னோவில் Tedhi Puliya Main Chowk என்ற இடத்திற்கு வருவதற்காக ஆட்டோவில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மூன்று பேர் பயணித்துள்ளனர். அவர்களிடம் ஆட்டோ டிரைவர் கட்டணம் முழுமையாகக்கொடுக்கும் படி கேட்டுக்கொள்ளார். ஆனால் எங்களால் முழுமையாக வாடகை தர முடியாது என்று ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகாத வார்த்தைகளால் மாறி மாறி இருதரப்பினரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் தான், அருகில் இருந்த போலீசாரிடம் உதவியை கேட்டு ஆட்டோ டிரைவர் சென்றார். ஆனால் என்ன தான் பிரச்சனை என்று கேட்பதுக்குள்ளாகவே ஆட்டோவில் பயணித்த பெண், யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆட்டோ டிரைவரை பளார், பளார் என்று கன்னத்தில் அறை விட்டதோடு காலில் இருந்த செருப்பை கழட்டி அடித்துவிட்டார்.


 






இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்த போலீசார் உள்பட யாருடைய உதவியும் கிடைக்காமல் தவித்து நின்றார் அந்த ஆட்டோ டிரைவர். இந்நிகழ்வை பலர் தங்களுடைய மொபைல்களில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டனர். இதனையடுத்து தற்போது வைரலாகியுள்ள இந்த வீடியோவினைப்பார்த்த நெட்டிசன்கள், இது மனித நேயமற்ற செயல் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இதுக்குறித்து இதுவரை சம்பந்தப்பட்ட பெண் மீது எந்த வழக்குப்பதிவு செய்ய வில்லை எனவும், இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. இதேப்போன்று தான் கடந்த மாதம் லக்னோவில் , போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாக பெண் ஒருவர் கார் டிரைவரை அறைந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.