இந்தியா - இங்கிலாந்து  2-வது டெஸ்ட்:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியை 28 ரன்கள் வித்தியாசத்தில் விட்டுக்கொடுத்த இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறது. அதன்படி, இன்று காலை தொடங்கிய இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. அதன்படி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினார்கள்.

Continues below advertisement

ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டம்:

இதில் 41 பந்துகள் களத்தில் நின்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த சுப்மன் கில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ஓரளவிற்கு ரன்களை சேர்த்தார். அதன்படி, 46 பந்துகள் களத்தில் நின்ற அவர் 34 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து நடையைக்கட்டினார். அப்போது இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் எடுத்தது. இதனிடையே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

அவருடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர். மறுபுறம் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக சதம் விளாசினார். அதன்படி, இங்கிலாந்து அணி வீரர் ஹார்ட்லி வீசிய பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டு 151 பந்துகளில் சதம் விளாசினார் ஜெய்ஸ்வால்.சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளாசியுள்ள இரண்டாவது சதம் இது. இதனிடயே, 59 பந்துகள் களத்தில் நின்று ஸ்ரேயாஸ் ஐயர்  27 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

Continues below advertisement

முதல் நாள் ஆட்ட நேர முடிவில்...

டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ரஜத் படிதர் 32 ரன்களிலும், அக்சர் படல் 27 மற்றும் சிகர் பரத் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதேநேரம் மறுபுறம் அதிரடியாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் 257 பந்துகளில் 17 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 179 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். அவருடன் அஸ்வின் இணைந்துள்ளார். இவ்வாறாக முதல் நாள் ஆட்ட நேர முடிவின் படி இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை பொறுத்த வரை சோயப் பஷீர் மற்றும் ரீகன் அகமது சிறப்பாக பந்து வீசினார்கள். இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அதேபோல், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஹார்ட்லி தாலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: IND vs ENG 2nd Test: ரோகித் சர்மாவுக்கு மறுவாழ்வு தந்த விசாகப்பட்டினம் - இந்த முறையும் வெல்வாரா?

மேலும் படிக்க: Viral Video: மைதானத்திலே சக வீரருடன் மல்லு கட்டிய பாகிஸ்தான் பிரபல கிரிக்கெட் வீரர்!