சிந்து ப்ரீமியர் லீக்:


பாகிஸ்தானில் சிந்து ப்ரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் காரச்சி ஹாசிஸ்

  மற்றும் லார்கானா சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் விளையாடின. இந்த  போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் 8-வது ஓவரை கராச்சி ஹாசிஸ் சுழற்பந்து வீச்சாளர் இப்திகார் அகமது வீசினார். அவர் வீசிய இந்த ஓவரில் லார்கான் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் ஆசாத் ஷபிக் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.






அவரது விக்கெட்டை எடுத்த பின்னர் இப்திகார் அகமது ஆசாத்தை நோக்கி சைகை காட்டினார். ஆனால், அதை கண்டுகொள்ளாத ஆசாத் ஷபிக் இப்திகாரை நோக்கி நகர்ந்தார். அப்போது இப்திகார் அகமது கோவமாக இருந்தார். இதனிடையே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது. இதனைக்கண்ட நடுவர்கள் மற்றும் சக வீரர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. இச்சூழலில், இப்திகார் அகமதுவின் செயல்பாட்டை கண்ட பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் களத்தில் இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினர்.


மன்னிப்பு கேட்ட இப்திகார் அகமது:


இந்நிலையில், இப்திகார் அகமது தன்னுடைய நடத்தைக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “களத்தில் அவ்வாறாக நடந்து கொண்டதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அந்த நேரத்தில் நான் இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு எதிர்வினையாற்றியிருக்கக்கூடாது. போட்டிக்கு பின்னர் நான் தனிப்பட்ட முறையில் ஆசாத் ஷபிக் பாயிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.





அவர் மீது நான் எப்போதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறோம்என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: Viral Video: சர்ஃபராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது; சகோதரர் குறித்து பேசிய U-19 நாயகன் முசீர் கான்!


மேலும் படிக்க: ICC Test Rankings: டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள்.. இந்திய வீரர்களுக்கு இடமில்லை! ரசிகர்கள் அதிர்ச்சி!