இரண்டாவது டெஸ்ட் போட்டி:


இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தற்போது 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது.


இச்சூழலில் நாளை (பிப்ரவரி 2) ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளது.  முன்னதாக, இந்த போட்டியில் விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜடேஜா உள்ளிட்டேர் விளையாடப்போவதில்லை என்பதால் இந்திய அணிக்கு இந்த ஆட்டம் சவால் நிறைந்த போட்டியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.  பேட்டிங்கை பொறுத்தவரை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே அனுபவம் வாய்ந்த வீரராக இருக்கிறார். அதனால் இந்த போட்டியை அவர் எவ்வாறு வழிநடத்தப்போகிறார்/ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவுகிறது.


வாழ்வு தந்த விசாகப்பட்டிணம்:


முன்னதாக, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கடந்த 2007 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக ரோகித் சர்மா அறிமுகமாகி விளையாடி வந்தார்.  அதேநேரம் 2013 ஆண்டில் தான்  டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த நேரத்தில் இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு சரிப்பட்டு வர மாட்டார் என்பது போன்ற கருத்துகள் எழுந்தன.  ஆனால், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இதே விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரோகித் சர்மா 176 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்களும் விளாசினார்.


இந்த போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ரோகித் சர்மா சரிப்பட்டு வர மாட்டார் என்று சொன்னவர்கள் எல்லோருக்கும் இந்த ஆட்டம் பதிலடியாக அமைந்தது. அன்றில் இருந்து இப்போதுவரை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகவே களம் இறங்கி வருகிறார். இந்நிலையில் தான் விசாகப்பட்டினம் மைதானத்தில் கேப்டனாக களம் இறங்க உள்ளார் ரோகித் சர்மா. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கு மறுவாழ்வு கொடுத்த விசாகப்பட்டினம் மைதானத்தில் கேப்டனாக ரோகித் சர்மா வெல்வார் என்று கூறுகின்றனர் ரசிகர்கள்.


மேலும் படிக்க: Viral Video: சர்ஃபராஸ் கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது; சகோதரர் குறித்து பேசிய U-19 நாயகன் முசீர் கான்!


மேலும் படிக்க: ICC Test Rankings: டாப் 5 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள்.. இந்திய வீரர்களுக்கு இடமில்லை! ரசிகர்கள் அதிர்ச்சி!