இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்தது.
லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று, கேப்டன் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினார். இருவரும் நன்றாக ஆடி வந்த நிலையில், ஜடேஜா 17 ரன்களில் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த, ரஹேனா டக் ஆவுட் ஆன நிலையில், அடுத்து பண்ட் களமிறங்கினார். அவர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய வந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 44 ரன்களுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். உணவு இடைவேளை வரை 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. 230 ரன்கள் லீடிங்கில் இருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஷர்துல் தாக்கூர், ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடினர். இதில் தாக்கூர் அதிரடி அதிரடியாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து 60 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. தாக்கூர் சென்ற சிறிது நேரத்தில் பண்ட் தனது 7ஆவது அரைசதம் அடித்தார். அதன்பிறகு அவரும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இந்த ஜோடி பிரிந்தவுடன், உமேஷ் யாதவ், பும்ரா ஜோடி இங்கிலாந்து பவுலர்களுக்கு தண்ணீ காட்டினார்கள்.
தேநீர் இடைவேளைக்கு பிறகு பவுலர்களான இவர்கள் அதிரடியாக ஆடியதால், அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்து வந்த நிலையில், பும்ரா 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறிது நேரத்தில் உமேஷும் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், இந்தியா 466 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இங்கிலாந்து அணிக்கு 367 ரன்களை நிர்ணயித்துள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியில் ரோகித் சர்மா 127, புஜாரா 61, ஷர்துல் தாக்கூர் 60 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 ,ராபின்சன், மொயின் அலி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. நாளை ஒருநாள் மட்டுமே உள்ளதால், போட்டியை டிரா செய்யும் நோக்கில் இங்கிலாந்து விளையாடும். இருப்பினும், இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
Ravi Shastri Test Positive: ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி!