குழந்தை நீ எங்க 6வது முகத்தை பார்த்ததில்லைய... ட்விட்டரில் தெறிக்கவிடும் இம்ரான் தாஹிர்

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ட்விட்டர் தளத்தில் ரசிகர்கள் உற்சாகமாக தங்களது வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

Continues below advertisement

 நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ட்விட்டர் தளத்தில் ரசிகர்கள் உற்சாகமாக தங்களது வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

Continues below advertisement

இந்நிலையில் சென்னை அணியின் வீரர் இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் வசனம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், “குழந்தை நீ இதுவரை சென்னை அணியின் 5 முகத்தை தான் பார்த்திருக்க. எங்களுக்கு இன்னொரு முகம் இருக்கு. ஆறாவது முகம் அதை நீ பார்க்க நினைக்காத நொந்துருவ எடுடா வண்டிய போடுரா விசில” எனப் பதிவிட்டுள்ளார். 

 

இம்ரான் தாஹிரின் இந்தப் பதிவை பலரும் லைக், ரீட்வீட் செய்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பக்கமும் இதனை லைக் செய்து ஒரு கமெண்ட் பதிவிட்டுள்ளது. அதில், சிங்கம் களம் இறங்கிருச்சு என்பதை குறிக்கும் வகையில் ஒரு பதிவை இட்டுள்ளது. 

 

முன்னதாக நேற்று நடைபெற்ற போட்டியில்  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். ராயுடு, சாம் மற்றும் பிராவோ ஆகியோரின் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது.

188 ரன்கள எடுத்தால் வெற்றி என்ர இலக்குடன், ராஜஸ்தான் அணியில்  பட்லர் மட்டும் சற்று நிதானமாக ஆடி 49 ரன்கள் எடுத்தார், மற்றவர்கள் வந்ததும் பெவிலியன் திரும்பினர். இறுதியில், ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 20 ஓவரில் 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

 

 

சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொயீன் அலி 3 விக்கெட்டும், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், பிராவோ தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்த சீசனில் சென்னை 2வது வெற்றியை தன் வசமாக்கியது.இதன்மூலம் தோனி சென்னை அணியின் கேப்டனாக 200ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி சென்னை அணியின் கேப்டனாக தோனி முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 



Continues below advertisement
Sponsored Links by Taboola