5 டிகிரி செல்சியஸ் குளிரில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் ஆக்கி போட்டியில், தங்கம் வென்ற 18 காஞ்சி வீரர்களுக்கு காஞ்சிபுரம் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடின பயிற்சி மற்றும் குழு வீரர்களின் ஒருங்கிணைப்பு தங்கம் வெல்ல காரணம் என பெற்றோர்கள் தெரிவித்தன.
ஐஸ் ஸ்கேட்டிங் ஆக்கி
தேசிய பேண்டி (Bandy) அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான ஐஸ் ஸ்கேட்டிங் ஆக்கி, போட்டி கடந்த 08 மற்றும் 09 தேதிகளில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டோராடூன் பகுதியில் நடைபெற்றது. தமிழ்நாடு ,தெலுங்கானா, ஆந்திரா , குஜராத், ஹரியானா உ.பி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த தேசிய குழு போட்டியில் மாநிலங்கள் சார்பாக போட்டியிட்டனர்.
5 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில் நடைபெற்ற போட்டி
10, 12, 14, 17, 19 வயது மற்றும் சீனியர் என 6 பிரிவுகளின் போட்டிகள் 5 டிகிரி செல்சியஸ் கடும் குளிர் மைதானங்களில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், காஞ்சிபுரம் ஸ்கேட்டிங் அகாடமி தலைமை பயிற்சியாளர் பாபு மற்றும் தமிழ் ,யுகேஷ் ஆகியோர் பயிற்சியின் கீழ் தமிழக அணி சார்பாக 18 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
காஞ்சிபுரம் வீரர்கள் சாதனை
இதில் 14 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு அணி தங்கம் சார்பில் காஞ்சி வீரர்கள் ஏழு பேர் பங்கேற்று தங்கம் வென்றனர். 10 வயது ஆண்கள் பிரிவில் மூன்று வீரர்களும், 12 வயதுக்கு ஆண்கள் பிரிவில் மூன்று வீரர்களும் 14 வயது ஆண்கள் பிரிவில் 5 வீரர்களும் என மொத்தம் 18 பேரும் பங்கேற்ற அணிகள் அனைத்தும் தங்கம் வென்றுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் திரும்பிய இந்த தங்க பதக்க வீரர்களுக்கு காஞ்சி ஸ்கேட்டிங் ஸ்போர்ட் அகாடமி சார்பில், மேள தாள முழங்க சிறப்பான வரவேற்பு வான வேடிக்கையுடன் அளிக்கப்பட்டது. பயிற்சி மைதானத்தில் பெற்றோர்கள், சக விளையாட்டு வீரர்கள் என அனைவரும் அவர்களுக்கு கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்து கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடினர்.
வீரர்கள் கோரிக்கை
இவ்விழாவில் பேசிய பெற்றோர்கள், கடும் வெய்யில் நேரங்களில் கடின பயிற்சி அளித்து, வீரர்களை உருவாக்கி, அதற்கு நேர் எதிர் மறையாக 5 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில் காஞ்சி வீரர்கள் விளையாடி தமிழகத்திற்காக தங்கப் பதக்கம் பெற்று தந்தது பெற்றோர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது என தெரிவித்தனர்.
5 டிகிரி செல்சியஸ் கடும் குளிர் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு, தமிழகத்தில் இது போன்ற மைதானம் அமைத்து ஒலிம்பிக் போட்டியில் வெற்றி தமிழக சார்பாக கலந்து கொண்டு இந்தியாவிற்கு பதக்கம் பெறும் முயற்சியை விளையாட்டு துறை செய்து தர வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது.