தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயனாக உலா வந்தவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான கார்த்திக் நினைவெல்லாம் நித்யா, மெளன ராகம், ஊமை விழிகள், சொல்லத் துடிக்குது மனசு, அக்னி நட்சத்திரம், வருஷம் பதினாறு, பாண்டி நாட்டுத் தங்கம், கிழக்கு வாசல், உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா என ஏராளமான வெற்றிப்படங்களை அளித்தவர்.
இவர் திரைப்படங்களில் பிசியாக இருந்த காலகட்டத்தில் இவர் நடிக்க முறையாக வராதது குறித்த குற்றச்சாட்டுக்களை தயாரிப்பாளர்கள் பலரும் தற்போது கூறி வருகின்றனர். தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கார்த்திக் குறித்து அளித்த பேட்டியில்,
விஜயகாந்திற்கு டிமிக்கி கொடுத்த கார்த்திக்:
கேப்டன் விஜயகாந்தே என்னன்னா ஏதோ ஒரு படத்துல கார்த்திக்கை வந்து கமிட் பண்ணாங்க. அப்போ விஜயகாந்த்கிட்ட சொல்றாங்க இரண்டு பேர் ஹீரோ இருப்பது போல கதை. கார்த்திக்கை கமிட் பண்ணிருக்கோம் சார். அப்படியா அவரு கொஞ்சம் பிரச்சினையாச்சே அப்படினு விஜயகாந்த் கேட்குறாரு.
இல்ல கரெக்டா வந்துருவாரு.. நீங்க இருக்கீங்கள அப்படினு சொல்றாங்க.
விஜயகாந்தும் சரி போங்க போடுங்கனு சொல்லிட்டாரு தயாரிப்பாளரிடமும், இயக்குனரிடமும். 2 நாள் படப்பிடிப்புக்கு வந்துட்டு 3வது நாள்ல இருந்து டிமிக்கி கொடுத்துட்டாரு. விஜயகாந்த் கூப்பிட்டாரு இந்த வேலை எல்லாம் ஆகாது, என்னோட தேதி எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் முதல்லே சொன்னேன் பிரச்சினை கொடுப்பாருனு.
ஆளை மாற்றிய கேப்டன்:
நீங்கதான் நம்பி கூப்பிட்டு வந்தீங்க. அட்வான்ஸ் எவ்வளவு கொடுத்துருக்கீங்கனு கேட்டாரு. 2 லட்சம் கொடுத்துருக்கோம்னு சொன்னோம். 2 லட்சத்தை விட்ருங்க. படத்துல கழிச்சுக்கோங்க. ஏதாவது ஒன்னு பண்ணிக்கோங்க. என் சம்பளத்துல கூட கழிச்சுக்கோங்க. ஆனா அவர் வேண்டாம். வேற ஆளு மாத்துங்கனு சொல்லிட்டாரு. அதுக்கு அப்புறம் வேற ஆளை போட்டாங்க டக்குனு உஷாரா. அந்த படம் பேரு எனக்கு மறந்துடுச்சு.
இவ்வாறு அவர் கூறினார்.
ரசிகர்கள் வேதனை:
பலரும் அந்த படம் எங்கள் அண்ணா என்று கூறி வருகின்றனர். கார்த்திக் விஜயகாந்துடன் இணைந்து ஊமை விழிகள் படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் மீது தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தற்போது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவது கார்த்திக் ரசிகர்களுக்கு வேதனையை உண்டாக்கி வருகிறது.
1981ம் ஆண்டு நடிக்க வந்த கார்த்திக் 2000ம் ஆண்டு முதல் பிரபலமான கதாநாயகனாக கொடிகட்டி பறந்தார். அதன்பின்பு அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் அதன்பின்பு நடிக்கத் தொடங்கினார். கடைசியாக அந்தாகன் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அவர் நடித்தார்.