ஐசிசி சமீபத்தில் டி20 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. அதில், 266 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்திலும், ஒரு புள்ளி குறைவாக 265 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி இரண்டாமிடத்தையும் பிடித்திருந்தது. இந்த நிலையில் டி20 பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.


இசான் கிஷனுக்கு மட்டு ம் இடம்:


பேட்டிங் தரவரிசைப்பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த இசான் கிஷன் மட்டுமே இடம் பிடித்துள்ளார். 689 புள்ளிகள் பெற்று 7வது இடத்தைப் பிடித்துள்ளார். 68 இடங்கள் முன்னேறியுள்ள அவர் இந்த அசாத்திய சாதனை படைத்துள்ளார். ஆனால், இந்த பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த வேறு எவரும் இடம் பிடிக்கவில்லை. ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் டி20 போட்டிகளில் பாகிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட அணிகள் ஆதிக்கம் செலுத்தியிருந்தன. அதே போலவே வீரர்கள் பட்டியலிலும் பேட்டிங்கில் பாகிஸ்தான் வீரர் பாபர் அஸாம் 818 புள்ளிகளுடன் முதலிடத்தையும், 794 புள்ளிகளுடன் முகமது ரிஸ்வான் இரண்டாமிடத்திலும், ஒரு இடம் சரிவடைந்து தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் 3வது இடத்திலும், எந்த மாற்றமும் இல்லாம இங்கிலாந்து விரர் தாவித் மாலன் 4வது இடத்தையும், ஆஸ்திரேளிய வீரர்கள் ஆரோன் ஃபின்ச் மற்றும் கான்வே ஆகியோர் 5வது மற்றும் 6வது இடத்திலும், இந்திய அணி வீரர் இசான் கிஷன் 7வது இடத்திலும், தென்னாப்பிரிக்க வீரர் ராசி 8வது இடத்திலும், இலங்கை வீரர் நிசங்கா 9வது இடத்திலும், கப்தில் 10வது இடத்திலும் உள்ளனர்.




முதலிடம் பிடித்த ஹஸல்வுட்:


பவுலிங்கை பொறுத்த வரை இந்திய அணியைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை. தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 792 புள்ளிகளுடன் வலுவான இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஹஸல்வுட் உள்ளார். இங்கிலாந்து வீரர் அடில் ரஷீத் 2ம் இடத்தையும், தென்னாப்பிரிக்க வீரர்களான டப்ரிஷ் மற்றும் அன்ரிச் ஆகியோர் 3வது மற்றும் 6வது இடங்களையும், ஆப்கானிஸ்தான் வீரர் ரசீத் கான் ஒரு இடம் முன்னேறி 4வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர்களான ஆடம் ஸம்பா மற்றும் அஸ்தான் அகர் ஆகியோர் 5வது மற்றும் 9வது இடத்தையும், இலங்கை வீரர்கள் ஹசரங்கா மற்றும் தீக்‌ஷனா ஆகியோர் 7வது மற்றும் 8வது இடத்தையும், வங்கதேச வீரர் நாசம் அகம்து பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.




ஒரு இந்திய ஆல்ரவுண்டர் கூட இல்லை:


ஆல்ரவுண்டர்கள் பிரிவிலும் இந்திய வீரர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை. 267 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 267 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாமிடத்தில் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன், மூன்றாமிடத்தில் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி, நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் க்லென் மேக்ஸ்வெல், 5ம் இடத்தில் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டன், 6மிடத்தில் அரபு வீரர் ரோஹன் முஸ்தஃபா, 7ம் இடத்தில் நமீபியா வீரர் ஜேஜே ஸ்மித், 8மிடத்தில் ஓமன் வீரரான ஸிஸீன் மக்சூத், 9வது இடத்தில் நேபாள வீரரான திபீந்திர ஐரி மற்றும் பத்தாவது இடத்தில் இலங்க வீரர் ஹசரங்காவும் உள்ளனர்.


இந்த ஆண்டில் இதுவரை 9 டி20 போட்டிகளில் இந்திய அணி  விளையாடியுள்ளது. இதில், 7ல் வெற்றியை பதிவு செய்துள்ளது. எனினும் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரகள் யாரும் இடம் பிடிக்காததால் ரசிகர்கள் அதிர்ச்சியிலும், கோபத்திலும் உள்ளனர். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வீரர்கள் பெரும்பான்மையோரைக் கொண்டு நடத்தப்படுகிறது. ஆனால் இந்திய அணியால் ஏன் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளதோடு, ஐபில் போட்டிகள் தன் இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என்று விமர்சித்து வருகின்றனர்.