Actress simran: சிம்ரனின் மகனா இது? ஹீரோவாகவே நடிக்கலாமே.! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கனவுக்கன்னி!

நடிகை சிம்ரன் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

தமிழ் சினிமாவில்  90-களின் பிற்பகுதி மற்றும் 20-களின் ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன்.  நடனமானாலும் நடிப்பானாலும் தனக்கென தனி பாணியை பின்பற்றிய நடிகை சிம்ரன் , இடுப்பழகி என கொண்டாடப்பட்டார். தமிழ் சினிமாவில்  90-களின் பிற்பகுதி மற்றும் 20-களின் ஆரம்பத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். கனவுக்கன்னி யார் என்று கேட்டால் இளைஞர்களின் பெரும்பாலானவர்கள் சிம்ரன் என பதிலளித்த காலகட்டம்  அது. 

Continues below advertisement

சினிமாவில் நடித்துகொண்டிருந்தபோதே தனிப்பட்ட வாழ்க்கையிலும்  அடுத்தக்கட்டத்துக்குச் சென்றார் சிம்ரன். தன்னுடைய சிறு வயது நண்பனான தீபக் என்பவரை பெற்றோர்கள் சம்பதத்துடன் திருமணம் செய்துகொண்டார்சிம்ரன். அவர்களுக்கு ஆதீக், அதீப் என்ற இரு மகன்களும் உள்ளனர். குறிப்பிட்ட காலம் கணவன்,குழந்தைகள், குடும்பம் என பயணித்த சிம்ரன் மீண்டும் சினிமாப்பக்கம் தலையைக் காட்டினார். சினிமா மட்டுமின்றி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பணியாற்றினார்.  

இந்நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சிம்ரன் தன்னுடைய மகன் புகைப்படத்தைப் பகிர்ந்து தற்போது வைரலாகியுள்ளார். தன்னுடைய மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள சிம்ரன், மகனுடன் தான் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கனவுக்கன்னி சிம்ரனுக்கு இவ்வளவு  பெரிய மகனா என அனைவரும் வாயைப் பிளந்துள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் விக்ரம் மகன் சினிமாவில் ஹீரோவால களமிறங்கலாம் எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்

முன்னதாக சினிமா நேர்காணல் ஒன்றில்பேசிய சிம்ரன் தன்னுடைய தொடக்கக் கால சினிமா வாழ்க்கைக் குறித்து பேசினார். அதில், பம்மல் கே சம்பந்தம் , பஞ்ச சந்திரம் படங்கள் ரொம்ப பிடிக்கும். வாலி படத்துல எனக்கு அஜித்துக்கும் முழுக்க முழுக்க சொல்லிக்கொடுத்தது இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாதான். நடிகர்கள் எப்போதுமே இயக்குநர்களுடைய எதி்ர்பார்ப்பை பூர்த்தி செய்யுறவங்களாகத்தான் இருக்கனும். சந்திரமுகி திரைப்படம் நான் பண்ணியிருக்க வேண்டியதுதான்.

 

மூன்று நாட்கள் ஷூட்டிங் போயாச்சு. அதன் பிறகுதான் எனக்கு தெரிய வந்தது. நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று. அதன் பிறகு நான் நடிக்கவில்லை. அந்த படத்துல நான் நடிக்காததற்கு வருத்தப்படவில்லை. காரணம் அது என்னுடைய முதல் குழந்தை அதனால ஹாப்பிதான். இப்போ ரஜினி சாரோடு நடிக்க முடியவில்லை என்றால் என்ன,  எதிர்காலத்தில்  நடிக்கும் நம்பிக்கை இருந்தது.   எப்போதுமே நான் ஃபிட்டா இருக்க வேண்டும்னு நினைப்பேன். எனக்கு அந்த கான்சியஸ் எப்போதுமே இருக்கும். இப்போ கொஞ்சம் குண்டா ஆன கூட , நடிக்க வாய்ப்பு கிடைக்குது. அப்போ அந்த  மாதிரியான சூழல் இல்லை என்றார்.

Continues below advertisement