டெங்கு ஃபீவர் வேகமாக பரவி வரும் சூழலில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே உலகக்கோப்பை ஃபீவர் பரவிவருகிறது. உலகமே காத்திருந்த இந்த தொடர்  இந்த முறை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.


அதன்படி, அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 ஆம் தேதி  வரை நடக்கும் இந்த தொடரின் தொடக்க விழா நாளை (அக்டோபர் 4) குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.


முன்னதாக, கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் முன்னணி நடிகைகள் ரஷ்மிகா மந்தனா, தமன்னா மற்றும் பிரபல பிண்ணனி பாடகர் அர்ஜித் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வின் போது இன்ஸ்டாகிராமில் ஹிட் ஆனா ‘மால டம் டம், மற்றும் ”ஊ அண்டவா” , “சாமி சாமி” ஆகிய பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தனர். இச்சூழலில், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதனமான நரேந்திர மோடி மைதனாத்தில் நாளை மிகபிரமாண்டமாக நடைபெற உள்ள இந்த தொடக்க விழாவில் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.






இந்நிலையில், இந்த நிகழ்வில், கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவின் வாழ்க்கை குறித்த திரைப்படமான “83” படத்தில் நடித்த ரன்வீர் சிங் பங்கு பெறுகிறார். அதேபோல் கடந்த முறை நிகழ்ச்சியை தங்களின் நடனம் மற்றும் குரலால் உற்சாக படுத்திய நடிகை தமன்னா மற்றும் பாடகர் அர்ஜித் சிங் உள்ளிட்டோரும் பங்குபெறுகின்றனர்.


மேலும், பாடகி ஆஷா போஸ்லே, ஸ்ரேயா கோஷல், இசையமைப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர் ஷங்கர் மகாதேவன் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர் என்ற தகவல்  வெளியாகி உள்ளது. 


தொடக்க விழா இல்லை?


அதேநேரம் நாளை நடைபெற உள்ள தொடக்க விழா தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரையிலும் ஐசிசி வெளியிடவில்லை. இதானால் இந்த தொடக்க விழா நடைபெறாது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  முன்னதாக கொரோனா காலக்கடங்களில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போதும் இது போன்ற தொடக்க விழாக்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது.






இதனிடையே, நாளை மறுநாள் (அக்டோபர் 5) நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ODI WC 2023 pakistan Team: உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் பலம் & பலவீனம் என்ன? - இந்தியாவில் அசத்துமா?


மேலும் படிக்க: Asian Games 2023: 29 ஆண்டுகளுக்குப் பின் படகோட்டுதல் போட்டியில் பதக்கம்.. சாதனையை செதுக்கிய அர்ஜுன் - சுனில் ஜோடி!