இந்தியா நியூசிலாந்து இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகிற ஜூன் 18-ஆம் தேதி இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதி போட்டிக்கு ரிச்சர்ட் இல்லிங்வொர்த் & மைக்கேல் கோஃப் கள நடுவர்களாக செயல்படுவார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது.






முன்னாள் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் பிராட் ஐசிசி போட்டி நடுவராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் ரிச்சர்ட் கெட்டில்பரோ ஐசிசி மூன்றாவது நடுவராகவும்,  அலெக்ஸ் வார்ஃப் ஐசிசி நான்காவது நடுவராக இந்த இறுதி போட்டியில் செயல்பட உள்ளனர்.


மேலும் அறிய : சர்ச்சை நாயகன் சஞ்சய் மன்ஞ்ரேக்கர்!


ஐசிசி மூத்த அதிகாரி அட்ரியன் கிரிஃபித் தெரிவிக்கையில் "ஒரு அனுபவமிக்க போட்டி நடுவர்கள் குழுவை அறிவிப்பதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது ஒரு கடினமான பெருந்தொற்று காலம், அதிர்ஷ்டவசமாக எங்களிடம் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் இது போன்ற அதிகாரிகள் உள்ளனர், முக்கியமான போட்டிகளில் நடுவராக செயல்பட இருக்கும் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.