ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் - கொல்கத்தா நைட் ரைசர்ஸ் இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணி விளையாட தொடங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில், ரானா  ஆகியோர் களமிறங்கினர். கில் 15 ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதன்பிறகு, திரிபாதி, ரானா ஜோடி சேர்ந்து ஹைதராபாத் பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இருவரும் வேகமாக அரைசதம் அடித்ததால், 11 ஓவரில் கொல்கத்தா அணி 100 ரன்கள் எடுத்தது.

இதன்பிறகு, நடராஜன் திரிபாதியின் விக்கெட்டை வீழ்த்தி, இந்த ஜோடியை பிரித்தார். அதிரடி மன்னன் ரசுல் வந்து மிரட்டுவார் என எதிர்பார்க்கையில் ரஷித் கான் அவரை அசால்ட்டாக தூக்கிவிட்டார். அதன்பின்னர் ரானாவும், வந்த வேகத்திலேயே மோர்கனும் (2 ரன்னில்) வெளியேறினார். கடைசி இரண்டு ஓவரில் தினேஷ் கார்த்தியின் மிரட்டலான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரானா 80, ராகுல் திரிபாதி 53, தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் எடுத்தனர்.

ஹைதராபாத் அணி தரப்பில் முகமது நபி, ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகள், புவனேஷ்வர் குமார், நடராஜன் தலா ஒரு  விக்கெட் எடுத்தனர்.

Innings Break!

Half-centuries from Nitish Rana (80) and Rahul Tripathi (53) and a cameo at the backend by @DineshKarthik, propel @KKRiders to a total of 187/6 on the board.

Scorecard - https://t.co/yqAwBPCpkb #VIVOIPL #SRHvKKR pic.twitter.com/7EzlOG6TQP
— IndianPremierLeague (@IPL) April 11, 2021

இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.