ஏ.எஃப்.சி பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா, சீனா, சீனா தைபே, இரான் அணிகள் இடம் பெற்றுள்ளன. மகாராஷ்டிராவில் தொடங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா - இரான் அணிகள் இன்று மோதின.


இந்த போட்டியில் பங்கேற்றிருந்த இந்திய அணியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்துமதி, சந்தியா ஆகிய இரு வீராங்கனைகள் ஸ்குவாடில் இடம் பிடித்திருந்தனர். மும்பை டி.ஒய் படில் மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில், 0-0 என்ற கணக்கில் போட்டி டிராவில் முடிந்திருக்கிறது.






ஏ.எஃப்.சி பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி இன்று களம் கண்டது. இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். சந்தியா, மாரியம்மாள், செளமியா, இந்துமதி, கார்த்திகா என தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீராங்கனைகள் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். 18 ஆண்டுகளுக்கு முன், இந்திய மகளிர் அணி ஏ.எஃப்.சி தொடரில் களமிறங்கியபோது, ஒரு தமிழக வீராங்கனை கூட அணியில் இடம் பெற்றிருக்கவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் தொடருக்கு ஐவர் தேர்வு செய்யப்படிருப்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.


ஏ.எஃப்.சி பெண்கள் கால்பந்து தொடரில் களமிறங்கும் இந்திய அணிக்கு, இந்திய கால்பந்து வீரர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். எனினும், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுடன் ஒப்பிடும்போது, குறிப்பாக பெண்கள் பங்கேற்கும் விளையாட்டுகளுக்கும் இன்னும் மக்கள் ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டும் என இந்திய மகளிர் கால்பந்து அணி கேட்டுக் கொண்டுள்ளது. இத்தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடப்பதால், சொந்த மண்ணில் களமிறங்கும் இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு ஆதரவு பெருகட்டும்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண