Hockey World Cup 2023 Final: உலகக்கோப்பை ஹாக்கி: பரபரப்பான ஆட்டத்தில் பெல்ஜியத்தை வீழ்த்தி ஜெர்மனி அணி சாம்பியன்!

15ஆவது ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது ஜெர்மன் அணி

Continues below advertisement

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற 15வது ஆண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டியில், நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தை வீழ்த்தி, மூன்றாவது முறையாக ஜெர்மனி அணி கோப்பையை வென்றது.

Continues below advertisement

இறுது போட்டி:

15ஆவது ஹாக்கி உலகக் கோப்பை தொடர் கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கி, ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக நடைபெற்று வந்தது. 

தொடரில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்து லீக், காலியிறுதி மற்றும் அரையிறுதி முடிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியும், முன்னாள் சாம்பியனான ஜெர்மனியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. 

ஜெர்மனி VS பெல்ஜியம்:

அதையடுத்து, இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணி மற்றும் ஜெர்மனி அணிக்கு நேருக்குநேர் மோதின. மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த போடியில் முதல் 2 கோல்களை பெல்ஜியம் பதிவு செய்ய ஜெர்மனி எந்த கோலையும் பதிவு செய்யவில்லை.

அதையடுத்து ஒரு கோலை பதிவை ஜெர்மன் அணி செய்து 1-2 என்ற கணக்கில் ஆட்டம் விறுவிறுப்பாக செல்ல மீண்டும் ஒரு கோலை ஜெர்மனி அடிக்க, 2-2 என்ற சம நிலையுடன் இருந்தன. ஆட்ட நேர முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம வகிக்க பெனாலிடி சூட் அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது. 

பெனால்டி சூட் அவுட் முறையில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி ஜெர்மன் அணி கோப்பையை வென்றது.

சர்வதேச அளவில் இரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில் பெல்ஜியம் 15 முறையும், ஜெர்மனி 14 முறையும் வென்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிவடைந்தது.

Continues below advertisement
Sponsored Links by Taboola