உலக அளவில் மிகவும் பிரபலமான பபுள் டீ (bubble tea)-யை கொண்டாடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. 


போபா (boba tea) என்று அழைக்கப்படும் பர்ல் மில்க் கொண்டு தயாரிக்கப்படும் குளிர்பானம் ஆகும். ஆமாம். இது கோல்ட் டீ (cold tea). இதன் மீது ’tapioca pearls' பபுள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. பபுள் டீ கொரோனா பெருந்தொற்று காலத்தில் மிகவும் பிரபலமடைந்தது. குறிப்பாக, ஜென் ஜி (Gen-Z) கிட்ஸ் அதாவது 1997-க்கு பிறகு பிறந்தவர்கள்,1981 முதல் 1996 வரையிலான மில்லேனியஸ் ஆகியோரிடையே பபுள் டீ பிரபலமாகியது.


பபுள் டீயை கொண்டாடும் விதமாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி இதை ஐகானிக் டிரிங்காக கருதி இதற்கென தனியாக இமோஜி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது..


கூகுள் டூடுல்


வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள், சாதனையாளர்களின் பிறந்த நாள், உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் கூகுள் நிறுவனம் சிறப்பு டுடூல் வெளியிடுவது வழக்கம்.



அதென்ன பபுள் டீ: 


பபுள் டீ என்பது நாம் வழக்கமாக குடிக்கும் சூடான டீ போன்றதில்லை. பால், ப்ளாக் டீ, ஐஸ் அதோடு ட்ராபிக்கா பர்ல்ஸ் (tapioca pearls). இது தைவான் நாட்டின் பராமபரிய பானமாகும். 80-களில் தோன்றியதாகும். டீ என்றழைக்கப்பட்டாலும், இதில் அதிகமாக டீ-யின் சுவை இருக்காது. கொஞ்சம் புளிப்பு சுவையுடன்,ஜில்லென்று இருக்கும். இதில் சேர்க்கப்படும் சிரப் பபுள் டீக்கு தனிச்சுவையை கொடுக்கும். 


சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து கெரமலைஸ் செய்து சிரப் தயாரிக்கப்படுகிறது. இது மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் (cassava root) கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதுதான் டீ-யில் பபுள் போன்று மிதக்கிறது. 


பால், டீ டிக்காசம், டாப்பிகா பபுள்ஸ், சிரப் ஆகியவற்றை சேர்ந்த்து அதோடு ஐஸ் கட்டி சேர்த்தால் பபுள் டீ ரெடி..


கடந்த 17-ஆம் நூற்றாண்டில் தைவானில் பழக்கமான இந்த பபுள் டீ, அந்த மக்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று இந்த டீயை பிரபலப்படுத்தினர்.ஆனால், தைவானில் பிரபலமடைந்த பபுள் டீயுன் நமக்கு இப்போது கிடைக்கும் பபுள் டீயும் ஒன்றல்ல என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது. 


பபுள் டீ-யில் பல்வேறு ஃப்ளேவர்கள் இருக்கின்றன. இன்றைக்கு பல புதிய சுவைகளில் அதை உருவாக்கவும் சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


பபுள் டீ டூடுல்:


கூகுள் வெளியிட்டுள்ள டூடுலை க்ளிக் செய்தால், நீங்களே உங்களுக்கான பபுள் டீவை உருவாக்கலாம். பபுள் டீ தயாரிப்பு குறித்தி அனிமேசன் க்ராபிக்ஸ் வகையில் கூகுள் லிங்க் கொடுத்திருக்கிறது.