சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு, ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சிக்காக, ஹாக்கி 5ஸ் என்ற புதிய தொடரை அறிமுகம் செய்துள்ளது. முதல் முறையாக ஹாக்கி 5ஸ் தொடர் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள லௌசானேவில் நடைபெற்றது. இதில் இந்தியா,போலாந்து, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் பங்கேற்றன. இதில் இந்திய அணி குரூப் சுற்று போட்டிகளில் 3 வெற்றி மற்றும் ஒரு டிரா செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 


 


நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா-போலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் இந்திய அணி 3 கோல்கள் பின் தங்கியிருந்தது. அதன்பின்னர் சுதாரித்து கொண்டு ஆடிய இந்திய அணியின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய அணி இறுதியில் 6-4 என்ற கோல் கணக்கில் போலாந்து அணியை வீழ்த்தி அசத்தியது. 


 






அத்துடன் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹாக்கி 5ஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. மேலும் இந்த ஹாக்கி 5ஸ் தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றது. ஹாக்கி 5ஸ் போட்டி மொத்தம் 5 வீரர்களை கொண்டு 20 நிமிடங்கள் வரை நடைபெறும். 


 


மகளிருக்கான ஹாக்கி 5ஸ் தொடரில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்திய மகளிர் அணி ஒரு வெற்றி, இரண்டு தோல்வி மற்றும் ஒரு டிரா செய்து நான்காவது இடத்தை பிடித்தது. இதனால் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண