மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். இந்த தொடரில் இந்தியாவின் சார்பில் 6 அணிகள் களமிறங்கிய நிலையில், இந்திய பி அணி மீது தான் அதிகளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்திய பி அணியில் இடம்பிடித்துள்ள குகேஷ் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியா பி அணியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா இடம்பெற்று இருந்தார்.  16 வயதான பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்த்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக பலம் வாய்ந்த ஸ்பெயின் அணி வீரரிடம் தோல்வி அடைந்தார். 



 

ஆனால், மற்றொரு தமிழக வீரரான குகேஷ் முன்னாள் உலக சாம்பியன் ஷிரோவை சந்தித்தார். ஷிரோவிற்கும், குகேஷிற்கும் இடையேயான போட்டி தொடக்கம் முதல் கடும் சவால் நிறைந்ததாகவே இருந்தது. குறிப்பாக, குகேஷ் ஸ்பெயின் வீரருக்கு கடும் சவால் அளித்தார். குகேஷின் சாமர்த்தியமான காய் நகர்த்தலினால் முன்னாள் உலக சாம்பியன் ஷிரோவை வீழ்த்தினார். இதற்கிடையே 6-ஆம் சுற்று ஆட்டங்கள் நேற்று  நடைபெற்றன. இந்திய பி அணி, 2.5-1.5 என்ற கணக்கில் ஆா்மீனியாவிடம் வீழ்ந்து, போட்டியில் முதல் தோல்வியை சந்தித்து. டி.குகேஷ்- சா்கிஸியான் கேப்ரியலை தோற்கடிக்க, நிஹால் சரீன்- மேல்கும்யான் ரேன்ட் ஆட்டம் டிரா ஆனது.



அதிபன்- டோ சஹாக்யன் சாமுவேலிடம் வெற்றியை இழக்க, ரவுனக் சத்வானி - ஹோவ்ஹானிசியான் ராபா்ட்டுடனான ஆட்டத்தில் தோல்வி கண்டாா். ஐந்தாவது சுற்றில் தோல்வி அடைந்த நட்சத்திர வீரா் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு தரப்பட்டது. 2006ம் ஆண்டு சென்னையில் பிறந்த குகேஷ் 9 வயதுக்குட்பட்ட ஆசியன் பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். 2018ம் ஆண்டு நடைபெற்ற உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். ஆசியன் யூத் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கப்பதக்கத்தை வென்றார். அதில், 12 வயதுக்குட்பட்டோர் மற்றும் ரேபிட் சுற்றுகளும் அடங்கும். மிக குறைந்த வயதிலே கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையை தன்னுடைய 12 வயது 7 மாதம் 17 நாட்களில் படைத்தார். ஜூலியஸ் பியர் சேலஞ்சர்ஸ் செஸ் டூர் பட்டம் வென்றுள்ளார்.



கடந்த மாதம் நடைபெற்ற போட்டியில் பிரபல கிராண்ட்மாஸ்டர் லீ குவாங் லியாமை மூன்றாவது சுற்றிலே வென்று அனைவரையும் திகைப்படைய வைத்தார்.Bகிராண்ட்மாஸ்டர் குகேஷ் செஸ் ஒலிம்பியார் போட்டி நடைபெறுவதற்கு முன்பு உலகளவில் செஸ் தரவரிசையில்  38வது இடத்திலிருந்து, குகேஷ் வேகவேகமாக முன்னேறி 26 இடத்தைப் பெற்றார். இந்திய அளவில் 4வது இடத்திலிருந்து மூன்றாவது இடத்தை அடைந்தார். ஆறு போட்டிகள் ஆறு வெற்றிகள் என அசர வைக்கும் ,  2கே கிட் முகேஷ் தரமான சம்பவங்களை செய்து வருகிறார்