நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஹாலிவுட் படமான தி க்ரே மேன் அண்மையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. அவர் நடிப்பில் 2015ல் வெளியான படம் அனேகன். அவருடன் அமைரா தஸ்தர், ஆஷிஷ் வித்யார்த்தி, கார்த்திக் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். படத்துக்கான ப்ரோமோஷனில் பேசியிருந்த தனுஷ். தன் மகன்கள் யாத்ரா லிங்கா பற்றி சில சுவாரஸ்ய தகவலகளைப் பகிர்ந்திருந்தார். 






அதில்,’யாத்ரா என்னை மாதிரி.அமைதியானவர்.நாம ஏதும் சொன்னா அதைப் பற்றி யோசிப்பார். சாப்பாட்டில் மட்டும் அவர் நான் வெஜிடேரியன். நான் சைவம். மற்றபடி, லிங்கா அவங்க அம்மா மாதிரி, படு உஷார். ஏமாற்றவே முடியாது. கதை சொல்லித் தூங்க வைச்சிடலாம்னு நினைச்சா நீங்கதான் ஏமாந்து போவீங்க. அவங்க அம்மா எப்பவுமோ எதுலையுமே ஷார்ப். படிச்சவங்க இல்லையா!. அப்படித்தான் இருப்பாங்க.’ என்கிறார். 
தனுஷை இடைமறித்த நிகழ்வின் ஆங்கர், அப்போ ஐஸ்வர்யாவை ஏமாற்றமுடியாதுனு சொல்லறிங்க... அப்படித்தானே? எனவும்..






“அட நல்லவிதமாத்தாங்க சொல்லறேன்” என நகைச்சுவையுடன் பதிலளிக்கிறார் தனுஷ்...



தனுஷும் ஐஸ்வர்யாவும் அண்மையில் தாங்கள் பிரிந்ததாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தனுஷ், பாரதிராஜா மற்றும் நித்யா மேனனுடன் இணைந்த நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.