நாடே சுதந்திர தின கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் சமயத்தில், கிரிக்கெட் / தோனி ரசிகர்களுக்கு இந்த நாள் சோகமான நாள் என்று சொன்னால் மிகையாது. ஆமாம். தோனி ரசிர்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கும் வார்த்தைகள் எனில் ’From 19:29 hrs consider me as Retired’. எத்தனை முறை என்றாலும் நெஞ்சில் ஏதோ ஒருவித மென்சோகத்தை உருவாக்கிவிடும். 


இன்றுடன் தோனி சர்வதேச கிரிகெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், இன்னும் தோனி இல்லாமல் கிரிக்கெட் என்பதை ரசிகர்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை.  தோனி என்பவர் வெறும் கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல. இந்திய அணியின் வளர்ச்சியில் பல புதுமைகளை புரட்சிகளை செயதவர். விமர்சனங்கள் தொடர்ந்தாலும், கேப்டனாக, இந்திய அணி வீரராக தன் பணியை திறமையுடன் முழுமையாக செய்தவர் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. 






அந்த நாள்... நீங்காமல் நினைவில் நிலைத்திருக்கும் துயரமான தருணம்..


2020, ஆகஸ்ட் 15ஆம் தேதி இரவு 7.29 மணிக்கு தன்னுடைய ஓய்வை அறிவித்தார், தோனி.  அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து இன்றுடன் இரண்டாண்டுகள்.. இதை நினைவு கூறும் வகையில், தோனி ரசிர்கர்கள் டிவிட்டரில், சோகத்துடன் பகிர்ந்துவருகிறார்கள். மேலும், நாங்கள் உங்களை மிஸ் செய்யாத நாட்களே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஓராண்டு நிறைவின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீடியோ தோனிக்கா வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதையும் ரசிர்கள் பகிர்ந்து தோனியை எவ்வளவு மிஸ் செய்கிறோம் என்றும், தோனியை எப்போதும் அன்பால் கொண்டாடுவோம் என்றும் நெகிழ்ச்சியுடன் தங்கள் நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர்.


சென்னை சூப்பர் கிங்க்ஸ் நினைவு பதிவு:


மகேந்திர சிங் தோனிக்கும் சென்னைக்கும் எப்போதும் நேசம்..பாசம்.. என் அன்பு பந்தம் தொடர்கிறது. சென்னை ஆடுகளம் எப்போதும் தோனிக்கும் ராசியானது என்றும் கூறப்படுகிறது.  2008- ஆம் ஆண்டு முதல் சி.எஸ்.கே. அணியில் தோனி விளையாடி வருகிறார். இவருக்கு சென்னையில் எப்போதும் உற்சாக வரவேற்பு உண்டு. தோனி சென்னையின் முகமாகிவிட்டார்.






சென்னை வரும்போதெல்லாம் தோனி ஒரு பைக் எடுத்து கொண்டு சென்னையை சுற்றிப்பார்ப்பார்.  இதனால், சென்னை மீது மிகுந்த காதல் ஏற்பட்டுள்ளது. அது தான் அவருக்கு நாளடைவில் சென்னை மிகவும் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும், என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி சென்னையில் தான் நடைபெறும் தோனி கூறியிருக்கிறார்.


இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் சிறந்த கேப்டன். கபில் தேவிற்கு பிறகு இந்தியாவிற்கு உலகக் கோப்பையை பெற்று தந்தவர்.  கிரிக்கெட் போட்டியில் தோனி களமிறங்கும் போது ரசிகர்கள் பட்டாளம் தோனி, தோனி என்ற ஆரவாரம் ஸ்டாடியமே அதிரும்.  கிரிக்கெட் விளையாட்டில் மிகச் சிறந்த ஃபினிஷராக அசத்தியவர்.  இப்படி தோனி என்றவுடன் அனைவருக்கும் நிறைய நினைவுகள் இருக்கும். அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், எப்போதும் தோனியை கொண்டாட எங்களுக்கு காரணம் இருக்கும் என்கின்றனர் தோனி ரசிகர்கள்.



 தோனி களத்தில் மட்டுமல்லாமல் ஓய்வு அறிவிப்பதிலும் தனித்துவமாக செயல்பட்டார். டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய தொடர் நடைபெற்று கொண்டிருக்கும்போதே,  திடீரென்று ஓய்வை அறிவித்தார். போலவே, ஒருநாள் போட்டிகளிலிருந்து திடீரென்று தனது இன்ஸ்டாகிராமில்  ஓய்வை அறிவித்தார். ஐ.பி.எல் தொடரில் சென்னையில்தான் தன் கடைசிப் போட்டி என்று கூறிப்பதால், கொஞ்ச நாட்கள் கழித்து ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் தோனியின் ஆட்டத்தைப் பார்க்க முடியாதே என்ற வருத்தம் இப்போதே ரசிகர்களை தொற்றிகொண்டது. தோனி என்பவர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம். அவரின் சகாப்தம் முடிந்திருக்கலாம். ஆனால், அது இனி இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சகாப்தங்களின் தொடக்கமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.


மேலும், ஹார்ட் பிரேக் என்பது தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததுதான் என்றும் ரசிகர்கள் டிவிட்டரில் எம்.எஸ். தோனி ஹாஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர். சுதந்திர தின சந்தோஷம் இருக்கிறது. ஆனால், அன்புள்ள தோனி, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், ஆகஸ்ட்,15 எங்களுக்கு சோர்வு தரும் நாள்தான் என்று பதிவிட்டு வருகின்றனர்.