தமிழ்நாட்டில் இன்று சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார். அதன்பின்னர் அவர் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


 


இந்நிலையில் இந்தாண்டிற்கான தகைசால் தமிழர் விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு வழங்கப்பட்டது. தகைசால் தமிழர் விருதை பெற்றுக்கொண்ட அவர் தனக்கு  அளிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய்க்கான காசோலையுடன் தன்னுடைய நிதியான 5 ஆயிரத்தை சேர்த்து 10 லட்சத்து ஐந்தாயிரத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். அவரின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். 


 


 இன்று காலை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார். அத்துடன் அவர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் உரையாற்றினார். அதில், “ஆங்கிலேயர்களின் காலணி ஆதிக்கத்தில் இருந்து இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை இன்று நாம் கொண்டாடி வருகிறோம். எண்ணற்ற தியாகிகளின் பங்களிப்பால் நாம் சுதந்திரத்தை கொண்டாடி வருகிறோம். நாட்டு விடுதலைக்கு மற்றும் சமூதாய விடுதலைக்கு போராடிய அண்ணா, மத வெரியர்களால் தேச பிதா காந்தி அடிகள் சுட்டி கொலை செய்யப்பட்ட இந்த நாட்டிற்கு காந்தி தேசம் என்று பெயரிட வேண்டும் என்று கூறினார். அதை நான் இன்று நினைவு கூர்கிறேன்.


 






1947ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபையில் பண்டிதர் நேரு ஒரு சிறப்பு மிக்க உரையை ஆற்றினார். அப்போது தான் இந்த மூவர்ண கொடி தேசிய கொடியாக மாறியது. விடுதலை இந்தியாவின் முதல் கொடியை ஒரு பெண்மணி தான் கொடுத்தார். மூவர்ண கொடியின் முன் அணிவகுத்து நிற்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றி. இந்திய நாட்டின் அனைத்து மக்களுக்கும் என்னுடைய விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.


ஏனென்றால் இந்திய துணை கண்டத்தில் முதல் முறையாக சுதந்திர முழக்கத்தை எழுப்பியது தமிழ்நாடு தான். அடிமைப்படுத்தல் தொடங்கிய நாள் முதல் அதை எதிர்த்து போராட தொடங்கியது தமிழ் மண். இதன்காரணமாகவே இங்கு தமிழனாக தேசிய கொடியை ஏற்றும் போது மிகுந்த உணர்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.




மேலும் படிக்க:75-வது சுதந்திர தினம்: வாழ்த்துகள், புகைப்படங்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இங்கே..!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண