கரோலின் வோஸ்னியாக்கி டென்னிஸில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை. டென்மார்க்கை சேர்ந்த இவர் 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்றார். கடந்த 2020-ம் ஆண்டு தனது 29-வது வயதில் வோஸ்னியாக்கி, டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்தார். இவர் முன்னாள் கூடைப்பந்து வீரர் டேவிட் லீயை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்துக்கு மீண்டும் திரும்ப உள்ளதாக கரோலினா அறிவித்துள்ளார்.
தனது குடும்பத்திற்காக அவர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்டில் இருந்து விலகி இருந்த நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிசில் விளையாட உள்ளார். 32 வயதான கரோலினா 71 வாரங்கள் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். அவர் 2018-ஆம் ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபனில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் உட்பட 30 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.
உங்கள் கனவு மற்றும் கடமை எதுவாக இருந்தாலும் நீங்கள் சாதிக்க முடியும் என்பதை தன் குழந்தைகளுக்கு காட்டவே மீண்டும் விளையாட முடிவு செய்துள்ளதாக கரோலினா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: கடந்த மூன்று வருடங்களாக விளையாட்டில் இருந்து விலகி எனது குடும்பத்துடன் செலவிட தவறிய நேரத்தை ஈடுகட்ட இரு குழந்தைகளை பெற்றெடுத்தேன். இப்போது இரண்டு அழகான குழந்தைகள் உள்ளனர். நான் இதை மிகவும் நன்றாக உணர்கின்றேன். ஆனால் இன்னும் என்னிடம் அடைய விரும்பும் இலக்குகள் உள்ளன. உங்களின் வயது அல்லது கடமை எதுவாக இருந்தாலும் தங்கள் கனவை அடையை முடியும் என்பதை என் குழந்தைகளுக்கு காட்ட விரும்புகின்றேன். இதை நாங்கள் குடும்பமாக முடிவு செய்தோம் இனியும் என்னால் காத்திருக்க முடியாது. நான் விளையாட வருகின்றேன்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க