சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஜனனியை மட்டும் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன். என்னிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே அனுமதிப்பேன் என குணசேகரன் சொல்ல அதை மதிக்காமல் எதிர்த்து ஜனனி பேசியதால் சண்டை முற்றிவிடுகிறது. சக்தி குணசேகரனை எதிர்த்து பேச, குணசேகரன், ”உன்னை படிக்க வைத்து சோறு போட்டு வளர்த்த என்னையே உன்னோட பொண்டாட்டி பேச்சை கேட்டு எதிர்த்து பேசுகிறாயா?” என சொல்ல கோபமான ஜனனி, ”வா சக்தி இனிமேல் நாம் இங்கே இருக்க வேண்டாம்.. போகலாம்” என்று சொல்கிறாள். 


 



உடனே ரேணுகாவும் நந்தினியும், ”இரு ஜனனி நாங்களும், இனி இங்கே இருக்க விருப்படவில்லை. வெளியில் போய் ஏதாவது வேலை செய்து எங்கள் குழந்தைகளை காப்பாற்றி கொள்வோம்” என கிளம்புகிறார்கள். அவர்களையும் தடுத்த குணசேகரன், “போறது என்றால் நீங்கள் மட்டும் போங்கள். குழந்தைகள் எங்கள் வீட்டு வாரிசு அவர்களை உங்களோடு அனுப்ப முடியாது” என்கிறார். ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினியிடம், “நீங்கள் இங்கே இருங்கள். நீங்கள் வேண்டுமானாலும் வெளியில் வந்த பிறகு சந்தோஷமாக இருக்க முடியும். ஆனால் இவர்களால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. தினம் தினம் அவர்கள்தான் உங்களிடம் தோற்று போகிறார்கள் என்பதை தெரியாமல் இருக்கிறார்கள். உங்களின் பணம் பகட்டு அனைத்தையும் தவிர்த்து உங்களை யாராவது மதித்தால் அப்போது சொல்லுக்குள் நான் உங்களிடம் தோற்றுப்போனதாக ஒத்து கொள்கிறேன். வெளியில் இருப்பவர்கள் மட்டுமல்ல.  உங்களை பெற்ற தாய் கூட உங்களை நல்லவர் என ஒருபோதும் சொல்லமாட்டார். அம்மா முதல் சக்தி வரை அனைவருக்கும் உங்களின் சாடிஸ்ட் புத்தி தெரிந்து விட்டது” என்கிறாள் ஜனனி.


ஜனனியும் சக்தியும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். 


ஆடிட்டர், வேக வேகமாக குணசேகரன் வீட்டுக்கு வந்து மிகவும் முக்கியமான விஷயம் உங்களிடம் தனியாக பேச வேண்டும் என அழைக்கிறார். பின்னர் இருவரும் பேசுகையில் ”பட்டம்மாளின் ஷேரில் ஏதோ சிக்கல் இருப்பது போல தெரிகிறது. அந்த 40 % ஷேருக்கும் உங்கள் வீட்டு மருமகள்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போல தெரிகிறது” என்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரன் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி இங்க வாங்கடி என சத்தம் போடுவதை கேட்டு நந்தினியும் ரேணுகாவும் அவர்கள் இருக்கும் அறைக்கு விரைகிறார்கள். 


 



அதற்குள் ஆடிட்டர் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அவர்களுக்கு இதில் ஏதோ சம்மந்தம் இருக்கிறது என்பது மட்டும் தான் தெரியும் ஆனால் அது என்ன என்பதையும் அதை வைத்து அவர்கள் என்ன பிளான் செய்கிறார்கள் என்பது பற்றியும் நமக்கு தெரியாது. அதனால் அவர்களை மிகவும் கவனமாக கண்காணித்து வாருங்கள். குறிப்பாக, உங்களின் தம்பி சக்தியின் மனைவி ஜனனி மீது கொஞ்சம் அதிக கவனமாக இருங்கள் என சொல்கிறார் ஆடிட்டர். அவர்கள் இருவரையும் இப்போது தான் வீட்டை விட்டு விரட்டி விட்டேன் என சொல்கிறார் குணசேகரன். ”உடனே நீங்கள் அவர்களுக்கு போன் செய்து வர சொல்லுங்கள். வெளியில் சென்று விட்டால் அவர்கள் பிளான் செய்ய வசதியாக போய்விடும்” என்கிறார் ஆடிட்டர். ஷாக்கான குணசேகரன், ”உடனே அவர்களுக்கு போன் செய்தால் என்னவோ  நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள். அதனால் கொஞ்ச நேரத்திற்கு பிறகு போன் செய்கிறேன்” என்கிறார். 


வெளியில் வந்த சக்தியும் ஜனனியும் பேசிக்கொள்கிறார்கள். சக்தி உன்னை குழப்புவதற்காக தான் உன்னுடைய அண்ணன் அப்படி பேசினார். அதை நினைத்து நீ குழம்பாதே. நாம் நிச்சயமாக வாழ்க்கையில் ஜெயிப்போம் என நம்பிக்கை கொடுக்கிறாள். சக்தியும் நீ எது செய்தாலும் நான் உனக்கு சப்போர்ட்டாக இருப்பேன் என உறுதி அளிக்கிறான். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.