ஐசிசி டி-20 உலககோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 போட்டிகள் நாளை தொடக்க உள்ள நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், 2021 டி-20 உலகக்கோப்பை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். 


கடந்த 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலககோப்பை போட்டிக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிக் கொள்ளும் போட்டி இதுவாகும்.  இதனால், இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், டி-20 உலகக்கோப்பையை வெல்வதற்கு எந்த அணிக்கு அதிக வாய்ப்புகள் என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் இன்சமாம், “எந்த தொடரிலும் இந்த அணிதான் வெற்றி பெறும் என உறுதியாகக் கூற முடியாது. ஆனால், எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை கணிக்க முடியும். நடப்பு உலகக்கோப்பையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு வலுவான அணி. அனுபவம் வாய்ந்த டி-20 கிரிக்கெட் வீரர்களை இந்திய அணி கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.


Also Read: தோல்வியின்றி சூப்பர் 12-க்கு முன்னேறியது ஸ்காட்லாந்து: யாரை காவு வாங்க போகுதோ இந்த ‛சுவர்’



அதுமட்டுமின்றி, அக்டோபர் 24-ம் தேதி நடைபெற இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை “இறுதிப்போட்டி” என குறிப்பிட்டுள்ள இன்சமாம், முக்கியமான ஒரு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பு இருக்க கூடிய ஒரே போட்டி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காகதான் இருக்கும் என தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கூட, முதல் லீக் போட்டியில் விளையாடிய இந்தியா - பாகிஸ்தான் அணிகளே இறுதிப்போட்டியில் சந்தித்து கொண்டன. இதனால், இந்த உலகக்கோப்பையில் அதை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். 


Also Read: பாகிஸ்தானோடு விளையாடுவது பதற்றமா இருக்கா? : பதில் கொடுத்த கோலியின் மாஸ் ட்வீட்


கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் அளித்த பேட்டியில், இந்தியாவுடனான டி20 உலககோப்பை போட்டியில் நாங்கள் வெல்வோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலககோப்பை வரலாற்றை பொறுத்தவரை இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால். இந்திய அணி நடப்பு தொடரிலும் தனது பெருமையை தக்கவைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண