இன்றைய நவீன உலகத்தில் வெயில் எனபது சருமத்தின் மீது  படாதவாறு இருக்கின்றனர்.அலுவலகத்தில் ஏசி அறையில் வேலை, வெளியில்  செல்வதற்கு சொந்த வாகனம் என வெயில் சில நொடிகள் கூட உடலில் படாதவாறு இருக்கின்றனர். வெயிலில் தினம் நிற்பதால், பல்வேறு நன்மைகள் இருக்கிறது.


எந்த நேரத்தில் வெயிலில் நிற்க வேண்டும் ?


சூரிய உதயம் ஆகும், காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை வெயிலில்  நிற்கலாம். அல்லது மாலை 5 மணிக்கு மேல் வெயிலில் நிற்கலாம். இது வெயிலில்  நிற்பதற்கு ஏதுவான நேரம் ஆகும்.





எவ்வளவு நேரம் வெயிலில் நிற்க வேண்டும் ?


தினம் ஒரு 20 - 30 நிமிடங்கள் வெயிலில் நிற்க வேண்டும். சருமத்தில் வெயில் பட வேண்டும். உடல் முழுவதையும், துணியால் மூடி கொண்டு, வெயிலில் நிற்பதால் எந்த பயனும் இல்லை. முடிந்த வரை சருமம் வெயிலில் பட வேண்டும்


வெயிலில் நிற்பதால் என்ன ஊட்டச்சத்துகள் கிடைக்கிறது


வைட்டமின் டி . இது சூரிய ஒளியில் இருந்து அதிகமாக கிடைக்கிறது. சூரிய ஒளியானது, சருமத்தின் மீது படும்போது சரும வைட்டமின் டி தயாரித்து கொள்கிறது.




வைட்டமின் டி ஆனது உடல் ஆரோக்கியத்திற்கு மிக  முக்கியமானது. குறிப்பாக எலும்புகள் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கீழ்வாதம், எலும்பு தேய்மான ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கிறது. மேலும் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கும், நாள் முழுவதும் உடல் புத்துணர்வுடன் இருப்பதற்கும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது.


வைட்டமின் டி எடுத்து கொள்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்


நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது - சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி சத்துகள் எடுத்து கொள்வதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் பாக்டீரியா போன்ற தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.


கண் பார்வை சீராகும் -நீண்ட நேரம் லேப்டாப் மற்றும் செல்போன் பயன்படுத்துவதால், கண்களின் பார்வை திறன் குறைய ஆரம்பிக்கும். தினம் வெயிலில் நின்று வைட்டமின் டி சத்துகளை எடுத்து கொள்ளும் போது கண் பார்வை  சீராகும். வயதான காலத்தில் வரும் கண் நோய்கள் வராமல் பாதுகாக்க படும்.




வளர்சிதை மாற்றம் சீராகும் - வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்கள், வளர்சிதை மாற்றம் குறைவாக இருக்கும். இதனால் உடல் பருமன் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தினம் வெயிலில் நின்று வைட்டமின் டி சத்து எடுத்து கொள்ளும் போது உடலில் வளர்சிதை மாற்றம் சீராகும்.


சரும ஆரோக்கியம் - வெயிலில் நின்றால் சரும பொலிவு குறைந்து விடும் என நினைத்து கொண்டு இருப்பார்கள். இது மிகவும்  தவறு.சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகள்  வெயிலில் இருந்து  கிடைக்கும்.அதனால் சருமம் ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் இருக்கும்.