கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமண தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டமும் குழந்தை திருமண தடுப்பு மற்றும் இளம் வயதில் கர்பத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த பயிற்சி கூட்டமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



அதனைத்தொடர்ந்து கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோது,


18 வயதுக்கு கீழ் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். 18 வயதுக்கு கீழ் திருமணமாகும் பெண்களுக்கு உடல் பொலிவு, அழகு ஆகியவை சீர் குலைந்து காணப்படும். 2006ம் ஆண்டு காலத்தில் காவேரிப்பட்டிணம் பேரூராட்சியில் ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் பெண் பிள்ளைகளில் 65 பெண் பிள்ளைகள் கர்ப்பமாக இருந்தது நாமெல்லாம் கவலைபடனும், வருத்தப்படனும். பெண்கள் பாதிப்புக்குள்ளாகுவதை இந்த அரசு பாரத்துக்கொண்டு சும்மா இருக்காது.


 




 


இந்த நிகழ்ச்சிக்கூட தாயுள்ளத்தோடு நடைபெறும் நிகழ்ச்சி. கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சி நடத்தியவர்கள் இது போன்ற சமூக நிகழ்ச்சிகளை நடத்தியதில்லை. ஆனால் இப்போது சமூக நிகழ்ச்சி நடப்பதற்கு காரணம் தற்போது அமைந்துள்ள தமிழ் நாட்டில் புதியதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தான் காரணம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 117 பேர் மகப்பேரு காலத்தில் உயிரிழந்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை குழந்தை திருமணம் என்பதால் இளம் வயது திருமணத்தை தடுக்க இந்த விழிப்புணர்வு பயிற்சி கூட்டம்.


இந்தியாவிலேயே வாரவாரம் 20 முதல் 30 ஆயிரம் வரை தடுப்பூசி முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்திய மாநிலம் தமிழ்நாடு. ஞாயிற்று கிழமை  நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போட மதுபிரியர்களும், அசைவ பிரியர்களும் வருவதில்லை எனகிற காரணத்தை அறிந்துள்ளோம்  வரும் வாரம் சனிக்கிழமை அவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்றார். 


 




 


சுகாதார துறை அமைச்சர் சுப்பிமரணியன் பேட்டியில்;


கோயமுத்தூர் பி.என்.பாளையம் அவினாசி சாலையில் உள்ள “ரோலிங் டஃப் கபே” எனும் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து கோவை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு இந்த கடையில் ஆய்வு நடத்தியதில் மதுவை ஐஸ்கிரீமில் கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டு, லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.பணத்திற்காக இவ்வாறு செய்பவர்கள் எல்லாம் உருப்பட மாட்டார்கள் என அமைச்சர் ஆவேசத்துடன் பேசினார்.


மத்திய அரசு 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி செல்வது குறித்து கேட்டபோது, 100 கோடி என்பது 50% தடுப்பூசி தான் போடப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது. மூன்றாவது அலை வெளிநாடுகளில் இருக்கின்றபோது 50% சதவீத நிலை என்பது ஓரளவுக்கு மன நிறைவை தரக்கூடியது என்றாலும், 100% இலக்கு மட்டுமே மன நிம்மதியை தரும் என்றார்.


 


 




 


மேலும் தமிழகத்தில் தடுப்பூசி என்பது அதிமுக காலத்தில் நாளொன்றுக்கு 61441 தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையில் திமுக ஆட்சியில் நாளொன்றுக்கு 2,72,000 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி 68% மக்களுக்கும், இரண்டாம் டோஸ் தடுப்பூசி 28% மக்களுக்கும் போடப்பட்டுள்ளது.என்று தெரிவித்தார்.