இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டதால் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். இவருடைய ட்விட்டர் பதிவுகள் அவ்வப்போது ட்ரெண்டாவது வழக்கம். குறிப்பாக இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் ஜடேஜா குறித்து அவர் ஏற்கெனவே பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவு ட்ரெண்டானது. 


இந்நிலையில் தற்போது அவருடைய ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது ட்ரெண்டாகி வருகிறது. அவருடைய அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து ப்ளூ டிக் எடுக்கப்பட்டது தொடர்பாக பல ரசிகர்கள் தங்களுடைய அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். 






 






 






 






 






 






அதில் திடீரென தோனியின் கணக்கில் இருந்து ப்ளூ டிக்கை நீக்க காரணம என்ன? எதற்காக ட்விட்டர் அப்படி செய்தது என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். ஒருவேளை அவருடைய கணக்கில் நீண்ட நாட்கள் பதிவு எதுவும் செய்யாததால் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவ்வாறு பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் 10ஆம் தேதி ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் பங்கேற்க யுஏஇ செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: அரையிறுதியில் உலக சாம்பியனிடம் பஜ்ரங் புனியா தோல்வி ; வெண்கலப் பதக்கத்திற்கு வாய்ப்பு