கடைசி போட்டியில் கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி:


இந்திய கால்பந்து அணியின் ஜாம்பவான் சுனில் சேத்ரி. கடந்த மே 16-ஆம் தேதி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது கால்பந்து ரசிகர்கள் மட்டுமின்றி விளையாட்டை நேசிக்கும் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், ”நான் உங்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய நேரம் இது. நான் எனது முதல் போட்டியில் விளையாடியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. எனது முதல் போட்டி, எனது முதல் கோல், இது எனது பயணத்தின் மறக்க முடியாத தருணம், நாட்டிற்காக இவ்வளவு போட்டிகளில் விளையாடுவே என்று நான் நினைக்கவே இல்லை.


நான் ஓய்வு பெற முடிவு செய்தபோது, முதலில் பெற்றோரிடமும், மனைவியிடமும் கூறினேன்” என்று கூறியிருந்தார்.


அதேபோல் ஜூன் 6 ஆம் தேதி குவைத் அணிக்கு எதிராக ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தகுதிச்சுற்று போட்டிதான் தான் விளையாடும் கடைசி போட்டி என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தான் கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறும் ஃபிபா உலகக் கோப்பை 2026 தகுதிச் சுற்றில் குவைத் அணிக்கு எதிராக தன்னுடைய கடைசி போட்டியில் விளையாடி வருகிறார். 


கவுரவித்த ஃபிபா உலகக் கோப்பை:


இச்சூழலில் சுனில் சேத்ரியை கவுரவிக்கும் விதமாக ஃபிபா உலகக் கோப்பை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், ஒன் லாஸ்ட் டைம் என்ற பதிவுடன் சுனில் சேத்ரி கம்பீரமாக இந்திய தேசிய கொடியை பிடித்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.






குரோஷியன் கால்பந்து கேப்டன் மேட்ரிக் வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோவில், வணக்கம் சுனில், நான் இந்த நேரத்தில் உங்களுக்கு வணக்கம் சொல்ல விரும்புகிறேன், தேசிய அணிக்காக நீங்கள் விளையாடும் கடைசி போட்டிக்காக உங்களுக்கும் உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.






நீங்கள் இந்த விளையாட்டின் ஒரு ஜாம்பவான் மற்றும் உங்கள் சக வீரர்களுக்கு, நீங்கள் அவருடைய கடைசி ஆட்டத்தை சிறப்பானதாகவும் மறக்க முடியாததாகவும் ஆக்குவீர்கள் என்று நம்புகிறேன்” என்று இந்திய கால்பந்து அணி பகிர்ந்துள்ள பதிவில் மோட்ரிக் கூறியுள்ளார்.




இச்சூழலில் குவைத் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடி வருகிறது கடைசி 45 நிமிடங்களில் ஒரு அணியும் கோல்கள் ஏதும் அடிக்கவில்லை.


அதேபோல் இந்த போட்டியை வெற்றியுடன் இந்திய அணி முடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.