அல்பேனிய கால்பந்து போட்டி தற்போது அந்நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த லீக் தொடரில் அதிக கோல் அடித்த வீரராக கானா நாட்டைச் சேர்ந்த ரஃபேல் ட்வாமேனா தான் இருக்கிறார். அந்த வகையில் இவர் விளையாடிய அல்பேனிய கால்பந்து சீசனில் மொத்தம் 9 கோல்களை அடித்துள்ளார்.


மேலும், ஒன்பது முறை அவர் விளையாடிய கிளப் KF எக்னேஷியா அணிக்காக சிறப்பாக விளையாடியதற்கான கேப்களையும் பெற்றிருக்கிறார்.


திடீரென மயங்கிய ரஃபேல் ட்வாமேனா:


நேற்று முன்தினம் (11 ஆம் தேதி) அல்பேனிய சூப்பர் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கிளப் KF  எக்னேஷியா மற்றும் பார்ட்டிசானி ஆகிய அணிகள் விளையாடின.  போட்டி தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று கொண்டிருந்தது.


அப்போது சரியாக 24 வது நிமிடத்தில் கிளப் KF எக்னேஷியா அணிக்காக விளையாடி வரும் ரஃபேல் ட்வாமேனா திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். அதைபார்த்த சக வீரர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். மேலும், அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுது. ஆனால், ரஃபேல் ட்வாமேனா மைதானத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


ரசிகர்கள் சோகம்:


இது தொடர்பாக அல்பேனிய கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மருத்துவ துறையில் நிபுணத்தும் பெற்ற மருத்துவர்களை வைத்து அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யப்பட்டது. இருந்த போதிலும்,  துரதிர்ஷ்டவசமாக அவர் காலமானார்” என்று தெரிவித்துள்ளது.






 


கானா கால்பந்து சங்கம் (GFA)வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் எங்கள் நாட்டிற்காக  ரஃபேல் ட்வாமேனா மொத்தம் ஒன்பது போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் தனது நாட்டிற்காக சிறப்பாக சேவை செய்தவர். அவர் எப்போதும் கானாவை பிரதிநிதித்துவப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர்” என்று கானா கால்பந்து சங்கம் தலைவர் ர்ட் எட்வின் சிமியோன்-ஒக்ராகு தெரிவித்துள்ளார்.


மாரடைப்பு:


சுவிஸ் கிளப் எஃப்சி சூரிச் அணிக்காக 18 போட்டிகள் விளையாடி 12 கோல்களை அடித்துள்ளார். முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிளப் இங்கிலாந்து அணிக்காக விளையாட இருந்தர்  ரஃபேல் ட்வாமேனா. ஆனால், அந்த நேரத்தில் இவருக்கு மாரடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.


அதனால் மருத்துவ பரிசோதனையில் தோல்வி அடைந்து அந்நாட்டு கிளப்பிற்காக விளையாடுவதில் இருந்த தள்ளிவைக்கப்பட்டார். அதேபோல்,ஸ்பானிஸ் அணியான லெவாண்டே அணிக்கும் விளையாடுவதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 


அப்போது, இவருக்கு ஏற்பட்ட மாரடைப்பை சுட்டிக்காட்டி மருத்துவர்கள் இவரை கால்பந்து விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று அறிவுருத்தியிருந்தனர். இச்சூழலில் தான், கடந்த நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழுந்துள்ளார். முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின்  BW Linz கிளப்பிற்காக விளையாடிய போது விளையாடி கொண்டிருந்த போதே மயங்கி விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இவரது மறைவிற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்களை பதிவு செய்து வருகின்றனர்.