இன்று அதிகாலை எஸ்டாடியோ சென்டெனாரியோவில் உருகுவேக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் காயம் காரணமாக பிரேசில் அணியின் நட்சத்திர நெய்மர் பாதியில் வெளியேறினார். தற்போது, அவர் காயமடைந்து ஸ்ரெட்சரில் தூக்கிசென்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


என்ன நடந்தது..?


போட்டி முடிய அரை மணிநேரத்திற்கு முன், நெய்மர் எதிரணி வீரர்களிடம் பந்துகளை வாங்க முயற்சித்தபோது, தனது பாதத்தை தவறுதலாக ஊன்றியுள்ளார். அப்போது, வலி தாங்க முடியாத நெய்மர், மைதானத்திற்கு நடுவே தனது இடது முழங்காலை பிடித்துக் கொண்டு கீழே விழுந்தார். 


அதன்பிறகு அவரை சோதித்த மருத்துவக்குழு, வலியில் துடித்த நெய்மரை ஸ்ரெட்சரில் தூக்கி சென்றனர். இதையடுத்து, போட்டிக்கு நடுவே அவரது கண்களில் இருந்து கண்ணீருடன் நெய்மர் வெளியேறியது ரசிகர்களின் மனதை கரைத்தது. காயத்தின் அளவு குறித்து அணியின் மருத்துவ ஊழியர்கள் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.






நெய்மருக்கு மீண்டும் காயமா..?


பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கடந்த மார்ச் மாதத்தில் காயம் ஏற்பட்டது. அப்போது அவர், கணுக்கால் தசைநார்கள் சரிசெய்தவற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டு 5 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் அணிக்கு திரும்பினார். இதனால், சவுதி ப்ரோ லீக் அணிக்கான அல்-ஹிலாலுக்கான அவரது அறிமுகமும் தாமதமானது குறிப்பிடத்தக்கது. 










உலகக் கோப்பை தகுதிச் சுற்று: 


நெய்மர் வெளியேறியபோது பிரேசில் உருகுவேயிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. ஐந்து முறை உலக சாம்பியனான அவர்கள் கடந்த மாதம் பிரச்சாரத்தின் முதல் இரண்டு போட்டிகளை வென்றது. கடந்த வியாழக்கிழமை வெனிசுலாவுக்கு எதிரான போட்டியை பிரேசில் அணி டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.