கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி நேற்று கொல்கத்தா சம்பவத்துக்கு ஹைதராபாத்தில் நல்லப்படியாக அவரது சந்திப்பை நடத்திக்காட்டிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு  ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Continues below advertisement

மெஸ்ஸியின் இந்திய பயணம்: 

அர்ஜென்டினாவின் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று  (டிசம்பர் 13)  இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக வந்திருந்தார். கொல்கத்தாவில் தனது 70 அடி சிலையை திறந்து வைத்த அங்கு அவருக்கு அவ்வளவு நல்ல அனுபவம் இல்லை,  சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அவர் 22 நிமிடங்களுக்குப் பிறகு மைதானத்தை விட்டு வெளியேறினார். மேலும் மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகள் மற்றும் விவிஐப்பிக்கள் சூழ்ந்து கொண்டதால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்தன்ர்

மறுபுறம், ஹைதராபாத்தில், அவர் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் கால்பந்து விளையாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் , மேலும் மெஸ்ஸி ராகுல் காந்திக்கு ஒரு டி-ஷர்ட்டையும் பரிசளித்தார். இதன் புகைப்படங்களை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். மெஸ்ஸியுடன் ஹைதராபாத்தில் லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Continues below advertisement

ஹைதராபாத்தில் நீண்ட இருந்த மெஸ்ஸி:

லியோனல் மெஸ்ஸி சிறிது தாமதமாக ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு வந்தார், ஆனால் அவர் கேமராவைப் பார்த்து ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டவுடன், பார்வையாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். மூன்று கால்பந்து வீரர்களும் அன்பால் பெரிதும் கவரப்பட்டனர். மேலும் மெஸ்ஸி ரசிகர்களை நோக்கி பந்தை கிக் அடித்தார். 

ஹைதராபாத்தை விட்டு செல்லும் போது, ​​மெஸ்ஸி அர்ஜென்டினா அணியின் கால்பந்து ஜெர்சியை அமைப்பாளர்களுக்கு பரிசாக வழங்கினார். மேலும், அவர் ஸ்பானிஷ் மொழியில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

 ராகுல் காந்திக்கு டி-ஷர்ட் 

ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராமில் லியோனல் மெஸ்ஸியுடன் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். முதலில், அவர் லியோனல் மெஸ்ஸி, ரோட்ரிகோ டி பால் மற்றும் லூயிஸ் சுவாரஸ் ஆகியோருடன் நடந்து செல்லும் ஒரு வீடியோ கிளிப்பைப் பகிர்ந்துள்ளார், மேலும் அவர்கள் ஒன்றாக ஒரு புகைப்பட அமர்வையும் செய்தார்கள். ஒரு படத்தில் லியோனல் மெஸ்ஸி அவருக்கு டி-ஷர்ட் பரிசளித்தார்.

முன்னதாக, கொல்கத்தாவில் லியோனல் மெஸ்ஸி தனது 70 அடி உயர நினைவுச்சின்னத்தை திறந்து வைத்தார். ஆனால் அவர் சால்ட் லேக் மைதானத்திற்கு வந்தபோது, ​​சிறிது நேரத்திற்குப் பிறகு ரசிகர்கள் மைதானத்தில் பாட்டில்கள் மற்றும் பிற பொருட்களை வீசத் தொடங்கினர். இதன் காரணமாக மெஸ்ஸி மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவத்திற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமூக வலைதளங்கள் மூலம் மெஸ்ஸி மற்றும்  ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்.

ஆனால் ஹைதராபாத்தில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்ததாகவும் மெஸ்ஸியை எந்த தடையும் இன்றி காண முடிந்ததாகவும், இப்படி தான் ஒரு விழாவை நடத்த வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் விழா ஏற்ப்பாட்டாளர்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.