பிரபல கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி கொல்கத்தாவில் ரசிகர்களை சிறிது நேரமே பார்த்துவிட்டு சென்றதால் ஆதிரமடைந்த ரசிகர்கள் மைதானத்தை சேதப்படுத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
இந்தியாவில் மெஸ்ஸி: .
அர்ஜென்டினா சூப்பர் ஸ்டாரான லியோனல் மெஸ்ஸி அமெரிக்க நாட்டின் மியாமியில் இருந்து துபாய் வழியாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இன்று அதிகாலை கொல்கத்தா விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் அவர் ஹோட்டல் செல்லும் வரை வழியெங்கும் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு நல்ல வரவேற்பு அளித்தனர்.
சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்கள் சந்திப்பு:
இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு பிறகு மெஸ்ஸி ஷாருக்கான் உள்ளிட்ட முக்கிய நபர்களை சந்தித்தார், தொடர்ந்து கொல்கத்தாவின் யுவ பாரதி மைதானத்துக்குச் சென்ற அவரை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, நடிகர் ஷாரூக்கான், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி ஆகியோர் வரவேற்றனர்.
20 நிமிடத்தில் கிளம்பிய மெஸ்ஸி:
பின்னர் சால்ட் மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். மெஸ்ஸியைச் சுற்றி ஏராளமான அரசு அதிகாரிகள் மெஸ்ஸியை சுற்றி இருந்தனர், அவரை கேலரியில் இருந்து ரசிகர்கள் பார்க்கவே முடியவில்லை. மெஸ்ஸியை தனியாக விட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கோரிக்கைகள் எழுந்தன
ஆனால் மைதானத்தில் வெறும் 22 நிமிடங்களே இருந்த மெஸ்ஸி அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவர் மீண்டும் வருவார் என காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்
மெஸ்ஸியை காண்பதற்காக 5000-12000 வரை டிக்கெட் வாங்கி காத்திருந்த ரசிகர்கள் பலர் ஆத்திரமடைந்து மைதானத்திற்கு உள்ளே தண்ணீர் பாட்டில்களை வீசத் தொடங்கினர். மேலும் பொறுமையை இழந்த ரசிகர்கள் பார்வையாளர்கள் கேலரியில் இருந்து மைதானத்திற்குள் இறங்கினர். மைதானத்தில் இருந்த கோல் கம்பம் உள்ளிட்ட பொருள்கள் சேதப்படுத்தப்பட்டது.
ஒரு பெரிய திரையில் மெஸ்ஸியைப் பார்க்க வேண்டும் என்றால், நான் ஏன் இவ்வளவு பணம் செலவிட்டேன்? என்றும்,அமைச்சர்களும் ஏற்பாட்டாளர்களும் புகைப்படம் எடுக்கிறார்கள் அப்போ பணம் செலவழித்த நாங்கள் யார் என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பினர். மேலும் வன்முறையில் ஈடுப்பட்ட ரசிகர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டி அடித்தனர்.