Messi 800th Goal: 800 கோல்கள்.. புது முத்திரை பதித்த மெஸ்ஸி.. ரொனால்டோவை எட்டிப்பிடிப்பாரா?

800 கோல்கள் அடித்த இரண்டாவது கால்பந்து வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி வசமானது. இதற்கு முன்னதாக, நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 800 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Continues below advertisement

நேற்று இரவு நடந்த அர்ஜென்டினா மற்றும் பனாமா (ARG vs PAN) இடையே நடந்த போட்டியில், லயோனல் மெஸ்ஸி ஒரு பெரிய சாதனையைப் பதிவு செய்தார். இந்த போட்டியின்  89வது நிமிடத்தில், அவர் ஒரு ஃப்ரீ கிக்கில் ஒரு அற்புதமான கோலை அடித்தார். இந்த கோலை பதிவு செய்ததன்மூலம் மெஸ்ஸி தனது கால்பந்து வாழ்க்கையில் 800 கோல்களை அடித்தார்.

Continues below advertisement

ரொனோல்டாவுடன் மெஸ்ஸி:

800 கோல்கள் அடித்த இரண்டாவது கால்பந்து வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி வசமானது. இதற்கு முன்னதாக, நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 800 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

2022 FIFA உலகக் கோப்பையை வென்ற பிறகு, அர்ஜென்டினா அணி முதல் முறையாக களம் இறங்கியது. அர்ஜெண்டினா மற்றும் பனமா அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி அர்ஜெண்டினா நாட்டின் பியூனஸ் அயர்ஸில் உள்ள 'தி மோனுமென்டல் ஸ்டேடியத்தில்' நடைபெற்றது. இந்த போட்டியை காண கிட்டத்தட்ட 84000 ரசிகர்கள் குவிந்தனர். 

அர்ஜெண்டினா வெற்றி:

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக அர்ஜென்டினா வீரர்கள் உலக கோப்பையை காண்பித்து ரசிகர்களை பரவசப்படுத்தினர். அதன்பிறகு, மெஸ்ஸியின் குரல் மைதானத்தில் ஒலித்தது. 

அர்ஜென்டினா அணிக்காக தியாகோ அல்மடா முதல் கோலை அடித்தார். 11 நிமிடங்களுக்குப் பிறகு, லியோனல் மெஸ்ஸி ஒரு ஃப்ரீ கிக் மூலம் தனது அணியை 2-0 என முன்னிலை படுத்த அர்ஜென்டிணா வெற்றிபெற்றது. 

ரொனால்டோ சாதனை: 

போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனல்டோ தனது 197வது போட்டியில் களமிறங்கி அதிக சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக குவைத் நாட்டை சேர்ந்த பேடர் அல்-முதா தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கையில் 196 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று இரவு (மார்ச் 23) லீக்டென்ஸ்டைனுக்கு எதிராக களமிறங்கியபோது தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கையில் 197வது போட்டியில் களமிறங்கினார். 2024 யூரோ கோப்பைக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ரொனால்டோ, லீக்டென்ஸ்டைன் அணிக்காக விளையாடினார். இந்த போட்டியில் ரொனால்டோ சிறப்பாக விளையாடி இரண்டு கோல்களை அடித்தார். இதனால் போர்ச்சுகல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் லிச்சென்ஸ்டைன் அணியை வீழ்த்தியது.

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ஜோவா கேன்செலோ மற்றும் பெர்னார்டோ சில்வா ஆகியோர் தலா ஒரு கோல்களை பதிவு செய்தனர். அதன் பிறகு 51 வது நிமிடத்தில் பெனால்டி மூலம் முதல் கோலை பதிவு செய்த ரொனால்டோ, அடுத்த 63 வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார். 

இந்த கோல்களை அடித்ததன்மூலம் ரொனால்டோ, தனது நாட்டிற்காக 120வது கோலை அடித்து புதிய சாதனையையும் படைத்தார். 

800 கோல்கள்: 

கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையில் 800 கோல்கள் அடித்த முதல் கால்பந்து வீரர் ஆவார். சமீபத்தில்தான் அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி 800 கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதனுடன், 5 வெவ்வேறு உலகக் கோப்பைகளில் கோல் அடித்த ஒரே கால்பந்து வீரர் என்ற பெருமையையும் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். ரொனால்டோ இதுவரை மொத்தமாக 830 கோல்கள் அடித்துள்ளார். இதனால், அவரது சாதனையை மெஸ்ஸி முறியடிப்பாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

Continues below advertisement