கிரிக்கெட் போட்டிக்கு ஐ.பி.எல், தொடர் நடத்தப்பட்டு வருவது போலவே, கால்பந்து போட்டிகளுக்காக இந்தியாவில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான ஐ.எஸ்.எல். தொடருக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. ஐ.எஸ்.எல். தொடர் வரும் செப்டம்பர் 21-ந் தேதி தொடங்க உள்ளது. 




21-ந் தேதி தொடங்கும் இந்த 10வது ஐ.எஸ்.எல். தொடரின் முதல் போட்டியில் கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கேரளா ப்ளாஸ்டர் எஃப் – சி அணியும், பெங்களூர் எப்.சி. அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.


இந்த தொடரில் கேரள ப்ளாஸ்டர் எஃப்.சி., பெங்களூர் எஃப்.சி., ஹைதரபாத் எஃப்.சி., எஃப்.சி. கோவா, ஒடிசா எஃப்.சி., சென்னையின் எஃப்.சி., மோகுன்பாகன் சூப்பர் ஜெயண்ட், பஞ்சாப் எஃப்.சி, நார்த் ஈஸ்ட் யுனிடெட் எஃப்.சி., மும்பை சிட்டி எஃப்.சி, ஈஸ்ட் பெங்கால் எஃப்.,சி., ஜாம்ஷெட்பூர் எஃப்.சி, ஆகிய அணிகள் மோதுகின்றன.





செப்டம்பர் 21-ந் தேதி தொடங்கும் இந்த தொடரின் லீக் போட்டிகள் மட்டும் வரும் டிசம்பர் 29-ந் தேதி வரை நடக்கிறது. ஐ.எஸ்.எல். தொடரின் போட்டிகள் அனைத்தையும் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமாவிலும் கண்டுகளிக்கலாம்.


இந்த தொடருக்கான போட்டிகள் அனைத்தும் கொச்சி, ஹைதரபாத், புவனேஸ்வர், கொல்கத்தா, கவுகாத்தி, பெங்களூர், ஜாம்ஷெட்பூர், டெல்லி, சென்னை, மும்பை, கோவா ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.


சென்னை அணி தன்னுடைய முதல் போட்டியில் ஒடிசாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி புவனேஸ்வரில் நடக்கிறது. செப்டம்பர் 23-ந் தேதி இந்த போட்டி நடக்கிறது.


மேலும் படிக்க: Gautam Gambhir: நானெல்லாம் கிரிக்கெட் விளையாடவே வந்திருக்க கூடாது - உலகக்கோப்பை நாயகன் கம்பீர் ஓபன் டாக்


மேலும் படிக்க: BAN Vs PAK Asia Cup 2023: பவுலிங் - பேட்டிங் அபாரம்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான்..!