இந்தோனேசியா கால்பந்து வீரர் ஒருவர் மைதானத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது ஒரு வீரர் மீது மின்னல் விழுந்தது. அப்போது, சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






சிங்கப்பூரில் உள்ள தனது கிளப்புக்கான நட்பு போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த இந்தோனேசிய கால்பந்து வீரர், மைதானத்தில் மின்னல் தாக்கி இறந்ததையடுத்து, கால்பந்து ரசிகர்கள் தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர் 35 வயதான கால்பந்து வீரர் செப்டைன் ரஹர்ஜா. இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 10 ம் தேதி (சனிக்கிழமை) 2 FLO FC பாண்டுங் மற்றும் FBI சுபாங் இடையேயான போட்டியில் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி ஸ்டேடியத்தில் நடந்தது.






இந்த சம்பவத்தால் பல ரசிகர்கள் மற்றும் சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கால்பந்து வீரரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எனினும், சிங்கப்பூர் நாட்டில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கிட்டத்தட்ட 12 மாதங்களுக்கு முன்பு இதே மைதானத்தில் இதேபோன்ற சம்பவம் நடந்தது.


கிழக்கு ஜாவாவின் போஜோனெகோரோவில் வசிக்கும் காயோ ஹெம்ரிக் என்ற 21 வயது கால்பந்து வீரர், மின்னலால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சோராடின் U-13 கோப்பை போட்டியில் நடைபெற்றது. சம்பவத்தின்போது, இளம் கால்பந்து வீரர் மின்னல் தாக்கி மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். உடனடியாக, சக வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் அவரை மீட்டு போஜோனெகோரோவில் உள்ள இப்னு சினா மருத்துவமனையில் அனுமதித்தனர். உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த இளம் வீரர் சுயநினைவுக்கு திரும்பினார். 


 சிங்கப்பூரில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக பிரேசிலில் இதுபோன்ற சம்பவங்களை அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது.