1968 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தில் நடத்தப்படும் மதிப்பிற்குரிய சர்வதேச கால்பந்து போட்டிதான் கிங்ஸ் கோப்பை. நடந்து வரும் 49வது கிங்ஸ் கோப்பை பதிப்பானது இன்று தொடங்கி வருகின்ற செப்டம்பர் 10 வரை நடைபெற உள்ளது. இந்தப் பதிப்பானது தனித்துவமான நாக் அவுட் வடிவத்தைக் கொண்டுள்ளது. 


இந்தநிலையில், இன்று தாய்லாந்தின் சியாங் மாயில் நடைபெற்ற கிங்ஸ் கோப்பை 2023 இன் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை ஈரான் அணி எதிர்கொண்டது. இரு அணிகளும் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி, தலா 2 கோல்களை பதிவுசெய்தனர். 90 நிமிடங்கள் முழுமையாக முடிந்த நிலையில், போட்டி யார் பக்கம் என்பதை உறுதி செய்யும் விதமாக பெனால்டி சூட் அவுட் கொண்டு வரப்பட்டது. 


அதில், ஈரான் அணி 5- 4 கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி கிங்ஸ் கோப்பையில் இருந்து வெளியேற்றியது. 






போட்டியின் தொடக்கத்தில், நௌரெம் மகேஷ் இந்திய அணிக்காக ஒரு கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். அதன் தொடர்ச்சியாக, ஈராக்கின் அல்-ஹமாடி பெனால்டி மூலம் 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார். இதையடுத்து, . இம்முறை இந்திய அணிக்காக மன்வீர் சிங் ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியில் இந்தியா மீண்டும் முன்னிலை பெற்றது. ஆனால் ஷூட் அவுட்டில் வெற்றி பெறுவதற்குள் ஈராக் அணிக்கு மற்றொரு பெனால்டி கிடைத்து கோல் அடித்து வெற்றி வாய்ப்பை இந்திய அணியிடம் இருந்து தட்டிபறித்தது. 


பெனால்டி ஷூட் அவுட்டில் ஈராக் ஐந்து கோல்களையும் அடித்தது. இந்திய தரப்பில் இருந்து நான்கு கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பெனால்டி ஷூட் அவுட்டில் இந்திய அணி ஒரு கோல் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஈராக்கில் இருந்து பெனால்டி ஷூட்அவுட்டில், பஷார் தனது அணியை வெற்றிபெற கடைசி கோலைப் போட்டார். 


ஈரானுக்கு பயம் காட்டிய இந்தியா: 


இந்தியா மற்றும் ஈராக் ஆகிய இரு அணிகளின் ஃபிஃபா தரவரிசையில் வித்தியாசம் உள்ளது. ஃபிஃபா தரவரிசையில் இந்தியாவை விட 29 இடங்கள் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், கிங்ஸ் கோப்பை அரையிறுதியில் ஈராக் அணிக்கு இந்தியா கடும் போட்டி கொடுத்தது. ஈராக் அணி சமீபத்தில் அரேபியன் வளைகுடா பட்டத்தை வென்றது. ஜூன்-ஜூலையில் நடந்த முத்தரப்பு சர்வதேச நட்பு கால்பந்து, இன்டர்காண்டினென்டல் கோப்பை மற்றும் SAFF சாம்பியன்ஷிப் 2023 ஆகியவற்றை வென்ற பிறகு, உலகின் நம்பர் 70 அரபு அணியை இந்தியா எதிர்கொண்து பயம் காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.