ஃபிபா உலகக் கோப்பையை இந்தாண்டு உலக புகழ்பெற்ற மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கோப்பையை வெல்லும் என ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்கு காரணம் என்னவென்று கீழே பார்ப்போம்...


ஃபிபா உலகக்கோப்பை 2022 - கத்தார்:


 ஃபிபா சர்வதேச கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் இந்த தொடரானது நேற்று கோலகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் விளையாட இருக்கின்றனர்.நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் உலகக் கோப்பையை நடத்தும் கத்தார் அணியும், ஈகுவடார் அணியும் நேருக்குநேர் மோதியது. இந்த போட்டியில் ஈகுவடார் அணி 2-0 என்ற கணக்கில் கத்தார் அணியை வீழ்த்தி தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக உலகக் கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. 


இன்றைய போட்டி விவரம்: 



  • இங்கிலாந்து vs ஈரான் மாலை: 6.30 மணி

  • செனிகல் vs நெதர்லாந்து இரவு 9.00 மணி


இந்தநிலையில், ஃபிபா உலகக் கோப்பை தொடரில் 32 அணிகள் பங்கேற்றாலும் கோப்பையை உலக புகழ்பெற்ற மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இதுதான். பிரெஞ்சு கால்பந்து லீக் தொடரான லிகு 1 தொடரில் புகழ்பெற்ற அணியான Paris Saint-Germain கால்பந்து கிளப்பில் கடந்த 2001 ம் ஆண்டு பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ இணைந்தார். இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டான 2022 ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பிரேசில் அணி கோப்பை வென்று அசத்தியது. 


அதேபோல், பிரான்ஸ் நட்சத்திர வீரரான கைலியன் எம்பாப்பே கடந்த 2017 ம் ஆண்டு பிஎஸ்ஜி அணிக்காக கையெழுத்திட்டு தற்போதுவரை அந்த அணிக்காக விளையாடி வருகிறது. இவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட அடுத்த ஆண்டு, அதாவது 2018 ம் ஆண்டு பிரான்ஸ் அணி ஃபிபா உலகக் கோப்பை வென்று அசத்தியது. 






உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான மெஸ்ஸி கடந்த 2021 ஆம் ஆண்டு பிஎஸ்ஜி அணிக்காக களமிறங்கினார். அதனை தொடர்ந்து இந்தாண்டு கத்தார் நாட்டில் 22வது உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. மேலே உள்ள நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கோப்பையை வெல்லும் என ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


சிலபேர் இந்த மாதிரியான கருத்து கணிப்புகளை கேலியாகவும், முட்டாள்தனமாக எடுத்துக்கொள்ளலாம். ஃபிபா உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வளர்ச்சி பெற்ற நாடுகளே யானை, ஆக்டோபஸ் மற்றும் மீன் போன்றவற்றை வைத்துகொண்டு எந்த அணி வெற்றிபெறும் என கணித்தனர்.