மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டிலும் சரி, கிரிக்கெட்டை கடந்தும் சரி மக்களால் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுகிறார். எப்படிப்பட்ட இக்காட்டான சூழ்நிலையிலும், பொறுமையாக கையாண்டு இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார். எனவே எம்.எஸ்.தோனி களம் இறங்கும் பொழுதெல்லாம் ரசிகர்களில் ஆரவாரத்தால் ஸ்டேடியமே அதிரும். விளையாட்டு உலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவரான தோனிக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் 'தல'...
ஐபிஎல் போட்டியின்போது, மகேந்திரசிங் தோனியை குறிக்கும் விதமாக ’தல’ என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும். இப்போது இந்த தல என்ற ட்ரெண்ட் கால்பந்து உலகக் கோப்பையிலும் தடம் பதித்துள்ளது.
ஃபிபா உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், கிறிஸ்டியானோ ரொனால்டோவை தல என்று குறிப்பிட்டு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
ரொனால்டோவுக்கு அறிமுகம் தேவையா..?
ரொனால்டோ கால்பந்து உலகின் தலைச்சிறந்த ஜாம்பவான்களில் ஒருவர். ரொனால்டோவை அறிமுகம் செய்ய தேவையில்லை. கால்பந்து பற்றி அணு அளவு கூட தெரியதாவர்களுக்கு கூட, கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ற பெயர் தெரியும்.
இதையடுத்து, கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவையும், கிரிக்கெட் ஜாம்பவான் தோனியையும் பெருமை சேர்க்கும் விதமாக ஃபிபா உலகக் கோப்பை ’தல’ என்ற இந்த பதிவை வெளியிட்டுள்ளது. தல என்பது தமிழ் வார்த்தை. இந்த தல என்பது தலைவர் எனற் பொருளை குறிக்கும். அதன்படி, ரொனால்டோவை ஒரு தலைவர் என்று ஃபிபா உலகக் கோப்பை 2024 வர்ணித்துள்ளது.
ஃபிபா உலகக் கோப்பை பக்கத்தில் இருந்து பதிவிடப்பட்ட ரொனால்டோவின் கேப்ஷனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும், கமெண்டில் ரொனால்டோவில் ஜெர்சி எண்ணும் 7, தோனியின் ஜெர்சி எண்ணும் 7 எனவே இருவரும் எங்களுக்கு தலதான் என்று பதிவிட்டு வருகின்றனர்.
ஐபிஎல் 2024ல் தோனி:
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் முடிந்தது எம்.எஸ்.தோனி தனது அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டும் விளையாடுவார் என்று யூகங்கள் கிளம்புகிறது. ஐபிஎல் 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸும் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இடையேயான முதல் போட்டிக்கு முன்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார். இதை தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாடிடம் தோனி கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். 14 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 2024 இன் பிளேஆஃப் கட்டத்திற்குள் 14 புள்ளிகளுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது. ஐபிஎல் 2024 சீசனில் 10 அணிகள் கொண்ட போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.