World Cup கால்பந்து தொடங்கப்பட்ட 1930ஆம் ஆண்டில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலகக் கோப்பை நடத்தப்படுகின்றது. இந்த உலகக் கோப்பையில் ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் 13 அணிகளில் இருந்து அதிகபட்சம் 32 அணிகள் வரை களமிறங்கியுள்ளது. இப்படி ஏறத்தாழ இதுவரை மொத்தம் 80 நாடுகள் களமிறங்கியுள்ளன. இந்த வரிசையில் பிரேசில் நாடு 5 முறை கோப்பைகளை வென்று அதிகமுறை உலகக் கோப்பையை வென்ற நாடு என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளது.


இதற்கு அடுத்து இத்தாலி மற்றும் ஜெர்மன் என இரண்டு நாடுகளும் தலா 4 முறை உலகக் கோப்பை மகுடத்தை தன் வசப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தில் வென்றதுடன் மொத்தம் மூன்று உலகக் கோப்பைகளை வென்று அர்ஜெண்டினா அடுத்த இடத்தில் உள்ளது. உருகுவே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தலா இரண்டு முறையும், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன. 


இந்தியா


கிரிக்கெட்டிற்காக அதிக முக்கியத்துவம் அளிக்கும் நாடான இந்தியா இதுவரை உலகக் கோப்பை கால்பந்தில் களமிறங்கியதில்லை. ஒருமுறை அந்த வாய்ப்பு கிடைத்தும் கால்பந்து விளையாட கட்டாயம் ஷூ அணிய வேண்டும் என்ற FIFA-வின் விதிமுறையை பின்பற்றாத காரணத்தினால் தொடரில் இருந்து வெளியேறியது. இதற்கு அடுத்து இந்தியா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறவில்லை. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்தியாவில் கால்பந்து போட்டிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாததுதான்.


அதேபோல் கிரிக்கெட்டினை அடுத்து ஹாக்கி போட்டிக்குத்தான் இந்தியாவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. கிரிக்கெட் விளையாட்டிற்கு நடத்தப்படும் ரஞ்சி கோப்பை போட்டிகள் போன்று ஆரம்ப காலத்தில் இருந்தே இந்தியாவில் கால்பந்து போட்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. சமீப ஆண்டுகளாகத்தான் ஐ.எஸ்.எல். என்ற இந்தியா முழுவதும் நடைபெறக்கூடிய லீக் போட்டிகளை நடத்துகின்றது. இதனால் இளைஞர்களின் விளையாட்டு மீதான ஆர்வம் என்பது கால்பந்தின் மீதும் பரவலாகி உள்ளது. உலகின் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடு கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதி பெறவே போராடுவது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 


பாகிஸ்தான்


சர்வதேச கால்பந்து அளவில் பாகிஸ்தானின் நிலை என்பது உண்மையிலேயே வருத்தத்திற்குரிய விசயமாக உள்ளது. குறிப்பாக 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாகிஸ்தானில் வாழ்கின்றனர். இப்போது, பாகிஸ்தானுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், 2026 இல் உலகக் கோப்பையில் பங்கேற்கும் 48 அணிகளாக விரிவடைகிறது.  அதாவது ஆசிய நாடுகள் பங்கேற்க அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மோசமான செய்தி என்னவென்றால், உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் கூட வெற்றி பெறாத ஒரே ஆசிய நாடு பாகிஸ்தான்.  இந்தியாவைப் போலவே, பாகிஸ்தானின் முக்கிய விளையாட்டு கிரிக்கெட், ஹாக்கி மற்றும் ஸ்குவாஷ் ஆகியவை மிகவும் பிரபலமாக உள்ளன. உண்மையில், கராச்சி நகரில் 2022 ஆம் ஆண்டு  கால்பந்து மைதானம் நிறுவப்படும் வரை, நாட்டிற்கு சொந்த கால்பந்து மைதானம் கூட கிடையாது. 


வங்கதேசம்


அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஏழாவது இடத்தில் உள்ள நாடு வங்கதேசம். FIFA உலகக் கோப்பையில் இன்னும் தகுதி பெறாத மற்றொரு தெற்காசிய நாடு வங்கதேசம். வங்கதேசம் 1980 இல் ஒரு முறை ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது, அந்த போட்டியில் கலந்து கொண்ட இரண்டு தெற்காசிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும். பங்களாதேஷ் 1973 இல் ஒரு தேசிய கால்பந்து அணியை நிறுவியது, ஆனால் அவர்கள் முயற்சித்த ஒன்பது முறையும் உலகக் கோப்பைக்குத் தகுதி பெறவில்லை.