இந்தியா போன்ற அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் கால்பந்து விளையாட்டு சமீப காலங்களில்தான் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.எஸ்.எல் லீக் தொடர்தான். இந்நிலையில் இந்திய கால்பந்து அணி எதிர்வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கலந்து கொள்ள தகுதித் சுற்றுகளில் விளையாடி வருகின்றது. 


உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று:


FIFA உலகக் கோப்பையின் அடுத்த பதிப்பு, இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பைகளை விடவும் மிகப்பெரிய பதிப்பாக இருக்கும், இது 32 முதல் 48 அணிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் அதிகப்படியான போட்டிகள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 


உலகக் கோப்பையில் ஆசியாவிற்கு எட்டு நேரடி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த 8 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தினை பிடித்துவிட இந்திய அணி போராடிக்கொண்டு உள்ளது. இதில் குரூப் ஏ-வில் உள்ள இந்திய அணி தனது முதல் தகுதிச்சுற்று போட்டியில் குவைத் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது தகுதிச் சுற்று பயணத்தினை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப் ‘ஏ’வில் கத்தார், ஆஃப்கானிஸ்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. 


கத்தார் - இந்தியா மோதல்:


அதேபோல் இந்தியா இன்று எதிர்த்து விளையாடவுள்ள கத்தார் அணியானது தனது முதல் தகுதிச் சுற்றில் ஆஃப்கானிஸ்தான் அணியை 8-1 என்ற கணக்கில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து, இந்தியாவை எதிர்க்க மிகவும் பலத்துடனும் நம்பிக்கையுடனும் களமிறங்கவுள்ளது.


இந்நிலையில் இன்று அதாவது நவம்பர் 21ஆம் தேதி இந்தியா மற்றும் கத்தார் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி புவனேஷ்வரில் உள்ள காலிங்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. 


இந்த போட்டியினை மைதானத்திற்கு நேரடியாக செல்ல முடியாத ரசிகர்கள் Sports18 1, Sports 18 1HD, and Sports18 3 ஆகிய சேனல்களில் பார்க்கலாம். 


கத்தாருக்கு எதிரான இந்திய தேசிய கால்பந்து அணி அணி


கோல்கீப்பர்கள்: அம்ரீந்தர் சிங், குர்பிரீத் சிங் சந்து, விஷால் கைத்


டிஃபெண்டர்கள்: ஆகாஷ் மிஸ்ரா, லால்சுங்னுங்கா, மெஹ்தாப் சிங், நிகில் பூஜாரி, ராகுல் பெகே, ரோஷன் சிங், சந்தேஷ் ஜிங்கன், சுபாசிஷ் போஸ்


மிட்பீல்டர்கள்: அனிருத் தாபா, பிராண்டன் பெர்னாண்டஸ், கிளான் மார்டின்ஸ், அபுயா ரால்டே, லிஸ்டன் கோலாகோ, மகேஷ் சிங் நௌரெம், நந்தகுமார் சேகர், ரோஹித் குமார், சாஹல் அப்துல் சமத், சுரேஷ் சிங் வாங்ஜாம், உதாந்த சிங்


முன்கள வீரர்கள்: இஷான் பண்டிதா, லல்லியன்சுவாலா சாங்டே, மன்வீர் சிங், ராகுல் கேபி, சுனில் சேத்ரி, விக்ரம் பர்தாப் சிங்