உலககோப்பை கால்பந்து போட்டித் தொடர் கத்தார் நாட்டில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 24-ந் தேதியான இன்று லீக் சுற்றில் மொத்தம் 4 போட்டிகள் நடைபெற உள்ளது.


இன்றைய போட்டிகள்:



  • சுவிட்சர்லாந்து – கேமரூன்

  • உருகுவே – தென்கொரியா

  • போர்ச்சுக்கல் – கானா

  • பிரேசில் – செர்பியா


சுவிட்சர்லாந்து – கேமரூன்:


உலககோப்பை கால்பந்து தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதன்முறை ஆகும். கேமரூன் அணியின் முக்கிய நட்சத்திர வீரராக ஆண்ட்ரூ – ப்ராங்க் ஜம்பா ஆங்குசா திகழ்கிறார். சுவிட்சர்லாந்து அணியின் நட்சத்திர வீரராக டேனிஸ் ஜகாரியா உள்ளார். அவருக்கு பக்கபலமாக ப்ரீல் எம்போலா உள்ளார். இரு அணிகளும் மோதும் இந்த அல் வக்ராவில் உள்ள அல்ஜனாவ்ப் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு மோதுகின்றன.


உருகுவே – தென்கொரியா:


குரூப் எச் பிரிவில் உருகுவே – தென்கொரிய அணிகள் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு நேருக்கு நேர் மோதுகின்றன. உருகுவே அணியின் செர்ஜியோ ரோசேட், செபாஸ்டியன் கோயட்ஸ், ஓலிவேரா, லூயிஸ் சூரஸ் ஆகியோரும், தென்கொரிய அணியில் கிம்சியூங்ஜூ, கிம்யங்க்வோன், லீ ஜே சூங், சன்ஹூங்மின் ஆகியோர் உள்ளனர்.  


போர்ச்சுக்கல் – கானா:


கால்பந்து ஜாம்பவனாகிய ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி இன்று தனது முதல் போட்டியில் கானாவுடன் மோதுகிறது. இரு அணிகளும் ஏற்கனவே உலககோப்பையில் கடந்த 2014ம் ஆண்டு மோதியபோது கானா அணி 2-1 என்ற கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தியது. போர்ச்சுக்கல் அணியின் தூணாக ரொனால்டோ உள்ளார். கானா அணியில் முகமது குடுஸ் உள்ளார். இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.


பிரேசில் – செர்பியா:


உலககோப்பை கால்பந்தை அதிகமுறை முத்தமிட்ட அணியான பிரேசில் இன்று தனது முதல் ஆட்டத்தில்  செர்பியா அணியை எதிர்கொள்கிறது. குரூப் ஜி யில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்க உள்ளது. பலமிகுந்த பிரேசில் அணி செர்பிய அணிக்கு எதிராக இதுவரை களமிறங்கிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பிரேசில் அணியைப் பொறுத்தவரை முக்கிய வீரராக நெய்மர் உள்ளார்.செர்பிய அணிக்கு பக்கபலமாக அலெக்சாண்டர் மிட்ரோவிக் உள்ளார்.