கத்தாரில் தற்போது நடைபெற்று வரும் ஃபிபா உலகக் கோப்பை தொடர் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இதனால் தினந்தோறும் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற ஆவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. முதல் அரையிறுதியில் குரோஷியாவை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், நடப்புச் சாம்பியனான பிரான்ஸ், 2-0 என்ற கோல்கணக்கில் முதல்முறையாக அரை இறுதிக்குள் நுழைந்த மொரோக்காவை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றது. 

இந்தநிலையில், நேற்றைய அரை இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் 2 கோல்கள் அடித்ததன் மூலம், கத்தார் உலகக் கோப்பை தொடரில் இதுவரை 62 போட்டிகளில் விளையாடி 163 கோல்கள் பதிவு செய்துள்ளது. இதன்மூலம், ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிகபட்சமாக அடிக்கப்பட்ட நான்காவது அதிக கோல்கள் இதுவாகும். 

இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றில் ஸ்பெயின் அணி கோஸ்டாரிகா அணியை 7-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதேபோல், 16வது சுற்றில் சுவிட்சர்லாந்து அணியை போர்ச்சுகல் 6-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. மேலும், ஈரானை 6-2 என்ற கணக்கில் இங்கிலாந்து வீழ்த்தியது.

இதையடுத்து, நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி மற்றும் பிரான்ஸ் அணி தலா 13 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளது. அதேபோல், போர்ச்சுகல் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் தலா 12 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கின்றனர். 

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இங்கிலாந்து மற்றும் போர்ச்சுகல் அணிகள் தொடரில் இருந்து விலகிவிட்டனர். 

இடம் நாடு போட்டிகள் கோல்கள்
1 இங்கிலாந்து 5 13
1 பிரான்ஸ் 6 13
3 போர்ச்சுகல் 5 12
3 அர்ஜென்டினா 6 12
5 நெதர்லாந்து 5 10
6 ஸ்பெயின் 4 9
7 பிரேசில் 5 8
8 குரோஷியா 6 6
8 ஜெர்மனி 3 6
10 செனகல் 4 5
10 ஜப்பான் 4 5
10 சுவிட்சர்லாந்து 4 5
10 செர்பியா 3 5
10 கானா 3 5
10 தென் கொரியா 4 5
10 மொராக்கோ 6 5
17 ஆஸ்திரேலியா 4 4
17 ஈக்வடார் 3 4
17 ஈரான் 3 4
17 கேமரூன் 3 4
21 போலந்து 4 3
21 சவூதி அரேபியா 3 3
21 கோஸ்ட்டா ரிக்கா 3 3
21 அமெரிக்கா 4 3
25 கனடா 3 2
25 உருகுவே 3 2
25 மெக்சிகோ 3 2
28 வேல்ஸ் 3 1
28 துனிசியா 3 1
28 கத்தார் 3 1
28 டென்மார்க் 3 1
28 பெல்ஜியம் 3 1
மொத்தம்     163

ஒரு தொடரில் அதிக கோல்கள்:

உலகக் கோப்பையின் ஒரு தொடரில் இதுவரை 171 கோல்கள் அடிக்கப்பட்டு இருக்கிறது. இது இரண்டு முறை நடந்துள்ளது. முதலில் கடந்த 1988 ல் பிரான்சில் உலகக் கோப்பை தொடரில், கடந்த 2014ல் பிரேசில் நடந்த உலகக் கோப்பை தொடரில் 171 கோல்கள் அடிக்கப்பட்டு உள்ளன. இதுவே தற்போது வரை ஒட்டுமொத்த உலகக் கோப்பை தொடரிலும் அதிகபட்ச கோல்களாக பதிவாகியுள்ளது. 

உலகக் கோப்பை கோல்கள்
உருகுவே 1930 70
இத்தாலி 1934 70
பிரான்ஸ் 1938 84
பிரேசில் 1950 88
சுவிட்சர்லாந்து 1954 140
ஸ்வீடன் 1958 126
சிலி 1962 89
இங்கிலாந்து 1966 89
மெக்சிகோ 1970 95
ஜெர்மனி 1974 97
அர்ஜென்டினா 1978 102
ஸ்பெயின் 1982 146
மெக்சிகோ 1986 132
இத்தாலி 1990 115
அமெரிக்கா 1994 141
பிரான்ஸ் 1998 171
தென் கொரியா / ஜப்பான் 2002 161
ஜெர்மனி 2006 147
தென்னாப்பிரிக்கா 2010 143
பிரேசில் 2014 171
ரஷ்யா 2018 169
கத்தார் 2022 163*

இந்தநிலையில், கத்தார் 2022 உலகக் கோப்பை தொடர் பிரான்ஸ் (1998) மற்றும் பிரேசில் (2014) முந்துவதற்கு மேலும் 11 கோல்களை அடிக்க வேண்டும். இன்னும் கத்தார் உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது இடத்துக்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டி நடைபெற இருப்பதால் 11 கோல்கள் அடித்து கத்தார் உலகக் கோப்பை 171 கோல்களை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 169 கோல்கள் அடிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.