உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.


இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தாரில் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.


முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தாரும், ஈகுவடாரும் மோதின. அந்த ஆட்டத்தில் ஈகுவடார் 0-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது. இன்று ஒரே நாளில் 4 ஆட்டங்கள் நடக்கின்றன. இன்று நடைபெற்ற 13ஆவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூனை வீழ்த்தியது.


பிரேசில்-செர்பியா


இன்று நள்ளிரவு 5 முறை சாம்பியனான பிரேசிலும், தரவரிசையில் 21ஆவது இடத்தில் இருக்கும் செர்பியாவும் மோதுகின்றன. ஃபிபா சர்வதேச தரவரிசையில் பிரேசில் அணி தான் முதலிடத்தில் உள்ளது. 
பிரேசில் அணி இதற்கு முன்பு 2002, 1994, 1970, 1962, 1958 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் ஆகியுள்ளது.


பிரேசில் அணி இதற்கு முன்பு செர்பியாவை உலகக் கோப்பை தொடரில் சந்தித்தபோது வென்றுள்ளது.
ரஷ்யாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் 2-0 என்ற கோல் கணக்கிலும், நட்பு ரீதியிலான ஓர் ஆட்டத்தில் 2014ஆம் ஆண்டு 1-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியுள்ளது பிரேசில்.


பிரேசில் அணியிடம் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் 1930 ஆம் ஆண்டு முதல் 2022 வரை நடைபெற்றுள்ள அனைத்து உலகக் கோப்பைத் தொடரிலும் பங்கேற்றுள்ள ஒரே அணியாகத் திகழ்கிறது.
மேலும், கடந்த 15 முறை (12 ஆட்டங்களில் வெற்றி, 3இல் டிரா) குரூப் ஆட்டங்களில் பிரேசில் அணி தோல்வியைச் சந்தித்ததில்லை. 






1982ஆம் ஆண்டு முதல் கடந்த உலகக் கோப்பை தொடர் வரை பிரேசில் அணி குரூப் சுற்றில் முதலிடத்தில் நீடித்து வந்திருக்கிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற 1966ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தான் பிரேசில் அணி முதல் சுற்றுடன் வெளியேறியது.


FIFA WC 2022 Qatar: சுவிட்சர்லாந்து அணி வெற்றித் தொடக்கம்... தோல்வியைத் தழுவிய கேமரூன்..
 
2014ஆம் ஆண்டைத் தவிர்த்து, கடந்த 5 முறை 5 முறை உலகக் கோப்பைப் போட்டிக்கு தகுதி பெற்ற அணியாக மேற்கு ஆப்பிரிக்க நாடான செர்பியா திகழ்கிறது. அதேநேரம், உலகக் கோப்பை தொடர்களில் அந்த அணி சந்தித்த 9 ஆட்டங்களில் ஏழில் தோல்வியைச்  சந்தித்துள்ளது. 2 ஆட்டங்களில் மட்டும் வெற்றி பெற்றது. 


எந்த அணி ஜெயிக்கும்?
முன்னாள் சாம்பியனான பிரேசில் அணிக்கே ஜெயிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அந்த அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கருத்துக் கணிப்பின் படி, 67 சதவீத வெற்றி வாய்ப்பு பிரேசில் அணிக்கும், டிரா ஆக 20 சதவீதமும் செர்பியா வெற்றி பெற 13 சதவீத வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.






நட்சத்திர வீரர்கள்
பிரேசில் அணியில் டியாகோ சில்வா (கேப்டன்), நெய்மார், வினியஸ் ஜூனியர், காப்ரியல் ஜீசஸ் உள்ளிட்ட வீரர்கள் நட்சத்திர வீரர்களா உள்ளனர்.


செர்பியா நட்சத்திர வீரர்கள்
செர்பியா கேப்டன் துசான் டாடிக், நிகோலா மிலன்கோவிச் உள்ளிட்டோர் உள்ளனர்.