அர்ஜென்டினா நட்சத்திரங்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் டியாகோ மரடோனா ஆகியோர் கால்பந்தில் ஜாம்பவான்களாக பார்க்கப்பட்டு வருகின்றனர்.  இந்தநிலையில், கன்னடத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காந்தாரா படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியின் ஒரு சீனில் மெஸ்ஸி மற்றும் மரடோனா புகைப்படத்தை யாரோ எடிட் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதை தற்போது பலரும் தங்களது  ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.






 2022 ஃபிஃபா உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது,. இதன்மூலம், அர்ஜெண்டினா அணியின்  36 ஆண்டுகால ஃபிபா உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. இந்த பெரிய வெற்றிக்குப் பிறகு, ரசிகர்கள் அதை ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா க்ளைமேக்ஸை இணைத்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


காந்தாரா திரைப்படத்தில் வன மக்களின் தெய்வமான பஞ்சுர்லியால் எழுந்தருளும்போது, ​​அடிபட்ட ரிஷப் ஷெட்டி தரையில் கிடப்பது போன்ற காட்சி இடம்பெற்றது. அந்த காட்சியும் இந்தியளவில் அதிகமாக பேசப்பட்டது. இதையடுத்து, அதை மீமாக மாற்றிய ட்விட்டர்வாசிகள் ரிஷாப்புக்கு பதிலாக லியோனல் மெஸ்ஸியும், பஞ்சுர்லிக்கு பதிலாக மறைந்த அர்ஜென்டினா ஜாம்பவான் டியாகோ மரடோனா புகைப்படத்தையும் இணைத்துள்ளனர். 






இதைப்பார்த்த மெஸ்ஸி மற்றும் அர்ஜெண்டினா ரசிகர்கள் ‘அடேய்! என்னடா பண்ணி வச்சுருகீங்க ..?” என்று நக்கலாய் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


காந்தாரா வசூல்:


பதினொன்று வார நீண்ட ஓட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக காந்தாரா திரைப்படத்தின் தியேட்டர் ரன் முடிவுக்கு வந்துள்ளது. இன்றுவரை இந்தியாவில் தோராயமாக ரூ.361 கோடிகள் மற்றும் வெளிநாட்டில் ரூ. 36 கோடிகள் என மொத்தமாக ரூ. 397 கோடிகள் வசூல் செய்துள்ளது. முழு ஓட்டத்தில் கிட்டத்தட்ட ரூ. 400 கோடியை எட்டியுள்ளது. கன்னட மொழி திரைப்படமான இது பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. மேலும் பல மைல்கற்களைத் தாண்டியுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கன்னட சினிமாவின் மிகப் பெரிய திரைப்படமான கேஜிஎஃப் அத்தியாயம் 2 ஐ வீழ்த்தி, எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற வரலாற்றை உருவாக்கியது.


இந்த எண்கள் மட்டுமே ஈர்க்கும் விஷயம் அல்ல, அவை எப்படி வந்தன என்பதும் புதிய விஷயம்தான். இது செப்டம்பரில் வெளியான முதல் நாளில் வெறும் ரூ.1.70 கோடிகள் மட்டுமே வசூல் செய்தது. ஆனால் அதன் இறுதி வசூல் இப்போது டிசம்பரில் 200 மடங்குக்கு மேல் என்று கணக்கிட்டுள்ளது. அதற்கு காரணம், இது பெருமளவில் கர்நாடகாவிற்கு வெளியே தாமதமாக வெளியிடப்பட்டதுதான். கர்நாடகாவில் இதன் வசூல் 100 மடங்கு இருந்தது. மேலும் கர்நாடகாவிற்கு வெளியேதான் இதன் ரீச் பெரிதாக இருந்துள்ளது. அதே போல் வட இந்தியாவில் இந்தி பதிப்பு 70 மடங்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. கேரளாவில் 40 மடங்கும் வசூல் செய்துள்ளது. பொதுவாக மற்ற மொழிப்படங்கள் அதிகம் ஈர்க்கப்படாத ஆந்திரா, தெலுங்கானாவில் கூட 17 மடங்கு லாபம் பார்த்தது குறிப்பிடத்தக்கது.