ஃபிபா மகளிர் உலகக் கோப்பை 2023 தொடரானது கடந்த ஜூலை 20 ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20 வரை நடைபெற்று வருகிறது.

மொத்தமாக இந்த உலகக் கோப்பை போட்டியில் 32 அணிகள் பங்கேற்றுள்ளன. அதில், ஒவ்வொரு குரூப்பிலும் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 8 குழுக்கள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு அணியும் அந்தந்த குழுக்களின் மீதமுள்ள அணிகளுடன் ஒவ்வொரு முறையும் மோதி வருகிறது. லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். 

இந்தநிலையில், தற்போது வரை ஃபிபா மகளிர் உலகக் கோப்பை போட்டியில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளன என்று இங்கு பார்க்கலாம். 

ஃபிபா மகளிர் உலகக் கோப்பை 2023 புள்ளிகள் அட்டவணை: 

குழு ஏ

எண் அணிகள் போட்டிகள் வெற்றி டிரா தோல்வி புள்ளிகள்
1 சுவிட்சர்லாந்து 3 1 2 0 5
2 நார்வே 3 1 1 1 4
3 நியூசிலாந்து 3 1 1 1 4
4 பிலிப்பைன்ஸ் 3 1 0 2 3

குழு பி 

எண் அணிகள் போட்டிகள் வெற்றி  டிரா தோல்வி புள்ளிகள்
1 ஆஸ்திரேலியா 3 2 0 1 6
2 நைஜீரியா 3 1 2 0 5
3 கனடா 3 1 1 1 4
4 அயர்லாந்து 3 0 1 2 1

குழு சி

எண் அணிகள் போட்டிகள் வெற்றி  டிரா தோல்வி புள்ளிகள்
1 ஜப்பான் 3 3 0 0 9
2 ஸ்பெயின் 3 2 0 1 6
3 ஜாம்பியா 3 1 0 2 3
4 கோஸ்ட்டா ரிக்கா 3 0 0 3 0

குழு டி

எண் அணிகள் போட்டிகள் வெற்றி  டிரா தோல்வி புள்ளிகள்
1 இங்கிலாந்து 3 3 0 0 9
2 டென்மார்க் 3 2 0 1 6
3 சீனா 3 1 0 2 3
4 ஹைட்டி 3 0 0 3 0

குழு இ

எண் அணிகள் போட்டிகள் வெற்றி டிரா தோல்வி புள்ளிகள்
1 நெதர்லாந்து 3 2 1 0 7
2 அமெரிக்கா 3 1 2 0 5
3 போர்ச்சுகல் 3 1 1 1 4
4 வியட்நாம் 3 0 0 3 0

குழு எஃப்

எண் அணிகள் போட்டி வெற்றி  டிரா தோல்வி புள்ளிகள்
1 பிரான்ஸ் 2 1 1 0 4
2 ஜமைக்கா 2 1 1 0 4
3 பிரேசில் 2 1 0 1 3
4 பனாமா 2 0 0 2 0

குழு ஜி

எண் அணிகள் போட்டிகள் வெற்றி டிரா தோல்வி புள்ளிகள்
1 ஸ்வீடன் 2 2 0 0 6
2 இத்தாலி 2 1 0 1 3
3 தென்னாப்பிரிக்கா 2 0 1 1 1
4 அர்ஜென்டினா 2 0 1 1 1

குழு எச்

எண் அணிகள் போட்டிகள் வெற்றி  டிரா தோல்வி புள்ளிகள்
1 கொலம்பியா 2 2 0 0 6
2 ஜெர்மனி 2 1 0 1 3
3 மொராக்கோ 2 1 0 1 3
4 தென் கொரியா 2 0 0 2 0

நேற்றைய போட்டி சுருக்கம்: 

ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் பெண்களுக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து நடந்து வருகிறது. டுனிடினில் நடந்த 'இ' பிரிவு லீக் போட்டியில் நெதர்லாந்து, வியட்நாம் அணிகள் மோதின. நெதர்லாந்து சார்பில் புரூக்ட்ஸ் (18,57வது நிமிடம்) இரண்டு கோல் அடித்து அசத்த, சக வீராங்கனைகளும் அடுத்தடுத்து கோல்களை பறக்கவிட்டனர். கடைசிவரை வியாட்நாம் அணி கோல் அடிக்க முடியாமல் திணறியது. இதன்மூலம்,  நெதர்லாந்து 7-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை லீக் சுற்றில் மூன்று போட்டியில் 2 வெற்றி, ஒரு 'டிரா' பெற்ற நெதர்லாந்து அணி 'இ' பிரிவில் 7 புள்ளி முதலிடம் பிடித்து மூன்றாவது முறையாக 'ரவுண்ட்-16' சுற்றுக்கு முன்னேறியது. வியட்நாம் அணி தொடரிலிருந்து வெளியேறியது.

போர்ச்சுகல் - அமெரிக்கா அணிகள் மோதிய மற்றொரு 'இ’ பிரிவு லீக் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. பெர்த்தில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் டென்மார்க் 2-0 என ஹைதியை வீழ்த்தியது. மற்றொரு 'டி' பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து 6-1 என சீனாவை வென்றது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து (9), டென்மார்க் அணி (6) 'ரவுண்ட்- 16' சுற்றுக்கு முன்னேறிய நிலையில், சீனா தொடரிலிருந்து வெளியேறியது.