உலகக் கோப்பை கால்பந்தில் இன்று குரூப் எச் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் கானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.


3.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் கேமரூன், செர்பியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் டிரா ஆனது. முன்னதாக, கானா அணியின் முகமது சலிசு 24 ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். இதையடுத்து சற்று நேரத்தில் (34-ஆவது நிமிடம்) அதே அணியின் முகமது குடுஸ் மற்றொரு கோலை வலைக்குள் செலுத்தினார்.


இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட தென் கொரியா, 58-ஆவது நிமிடத்திலும் 61 ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தது. இதையடுத்து, இரு அணிகளும் தலா 2 கோல்களுடன் சமநிலையில் இருந்தது. யார் கோல் அடித்து வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வேளையில் 68ஆவது நிமிடத்தில் கானா அணியின் முகமது குடுஸ் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.






இதையடுத்து, கானா அணி முதல் வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்தது. உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக 3 கோல்களை கானா அணி பதிவு செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.


குரூப் பிரிவில் கானா அணி 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆசிய அணியான தென் கொரியா 2 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.


Sanju Samson: தொடர்ந்து ட்ரெண்டிங்; உலகக் கோப்பை கால்பந்து மைதானத்திலும் சஞ்சு சாம்சனுக்கு பெருகும் ஆதரவு!


இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.


இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.


8 பிரிவுகள்
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும். 


மொத்தம் எத்தனை ஆட்டங்கள்
48 லீக் ஆட்டங்கள் உள்பட மொத்தம் 64 ஆட்டங்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நடைபெறுகின்றன.


முதல்முறை
அரபு நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன் ஆசிய கண்டத்தில் கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.