உலக்கோப்பை கால்பந்தாட்ட தொடரில் மொராக்கோ அணிக்கு எதிரான காலிறுதிப்போட்டியில். நட்சத்திர வீரர் ரொனால்டோ அடங்கிய போர்ச்சுகல் அணி மோதியது. கோடிக்கணக்கான ரசிகர்களுடன் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில், மொராக்கோவுடன் மோதிய போர்ச்சுகல் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

  



ரொனால்டோவிற்கு வாய்ப்பு மறுப்பு:


போட்டியின் 42வது நிமிடத்தில் மொரோக்கோ அணி கோல் அடித்தது.  அதன் பின்னர் போட்டியை வென்றால் தான் தொடரில் நீடிக்க முடியும் என்பதால் ரொனால்டோ 50வது நிமிடத்தில் களமிறக்கப்பட்டார். அணி தன்னிடம் உள்நோக்கத்துடன் செயல் பட்டாலும், களமிறங்கியது முதல் தனது உலகக்கோப்பைக் கனவு, ஒட்டுமொத்த போர்ச்சுகலின் பெரும் கனவை மனதில் கொண்டு விளையாடினார்.


ஆனால், பெரும் லட்சியத்துடன் விளையாடியவருக்கு பலன் கிடைக்கவில்லை. மொராக்கோ அணியும் தனது உச்சபட்ச ஆட்டத்தினை வெளிப்படுத்தி ரொனால்டோவை சுற்றி வளைத்து தடுத்துக்கொண்டே இருந்தது. இதனால் போட்டியின் முடிவு மொராக்கோவுக்கு சாதகமாக மாறியது. போட்டியில் தோல்வி அடைந்தது மட்டும் இல்லாமல் உலக்கோப்பை கனவையும் கைவிடவேண்டிய நிலைக்கு ரொனால்டோ ஆளானார். போர்ச்சுகல் அணி ஒருமுறை கூட உலகக்கோப்பையை வெல்லாத நிலையில், உலகக்கோப்பையை வென்று கொடுப்பேன் என சபதம் ஏற்றிருந்த ரொனால்டோ மைதானத்திலேயே கதறி அழுதார். 


 


ரசிகர்கள் சோகம்:


தொடர்ந்து ரொனால்டோவை மூன்று போட்டிகளில் அவமானப்படுத்தும் வகையில் நடத்திய பயிற்சியாளரின் உள்நோக்கம், போர்ச்சுகலின் உலகக்கோப்பை கனவை எட்டமுடியாமல் செய்துள்ளது. 37 வயதான ரொனால்டோ அடுத்த உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், தன்னுடைய உலகக்கோப்பை கனவை கத்தாரில் கண்ணீரில் கரைத்துவிட்டார் என்றே கூறவேண்டும். 






கனவுக்காக போராடினேன்:


இந்நிலையில் ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்த்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  "போர்ச்சுகலுக்கு உலகக் கோப்பையை வெல்வதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியக் கனவாக இருந்தது.  அதிர்ஷ்டவசமாக, பல சர்வதேச பரிமாண பட்டங்களை நான் வென்றேன், ஆனால் நம் நாட்டின் பெயரை உலகின் மிக உயர்ந்த மட்டத்தில் வைப்பது எனது மிகப்பெரிய கனவாக இருந்தது. அதற்காக நான் போராடினேன். இந்தக் கனவுக்காக நான் கடுமையாகப் போராடினேன்.


எனது கனவு முடிந்தது - ரொனால்டோ



16 ஆண்டுகளில் 5 உலகக்கோப்பை தொடர்களில் போர்ச்சுகல் அணிக்காக சிறந்த வீரர்களுடன் சேர்ந்து, மில்லியன் கணக்கான போர்ச்சுகல் மக்களின் ஆதரவுடன், வெற்றிக்காக நான் எனது அனைத்தையும் கொடுத்தேன். எல்லாவற்றையும் களத்தில் விட்டுவிட்டேன். நான் சண்டையை விரும்பவில்லை அதேநேரம்  எனது  கனவையும் கைவிடவில்லை.


துரதிர்ஷ்டவசமாக, எனது கனவு முடிந்தது. மோசமாக எதிர்வினையாற்றுவது மதிப்புக்குரியது அல்ல. அதிகம் பேசப்பட்டுள்ளது, அதிகம் எழுதப்பட்டுள்ளது, ஆனால் போர்ச்சுகல் மீதான எனது அர்ப்பணிப்பு ஒரு போதும் மாறவில்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் எப்போதும் எல்லோருடைய இலக்குக்காகவும் போராடும் ஒரு நபராக இருந்தேன். எனது அணியினர் மற்றும் எனது நாட்டை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். இப்போதைக்கு, சொல்வதற்கு அதிகம் இல்லை. நன்றி, போர்ச்சுகல். நன்றி, கத்தார். கனவு நீடிக்கும் போது அழகாக இருந்தது... இப்போது, ​​ஒரு நல்ல ஆலோசகராக இருக்க வேண்டிய நேரம் இது, மேலும் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டும்" என, ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார்.